புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் 136-ஆவது பிறந்த நாள் அவரின் சிலைக்கு தமிழர் தலைவர் மாலை அணிவித்து மரியாதை!

1 Min Read

சென்னை, ஏப்.29- புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்களின் பிறந்த நாளான இன்று அவரது சிலைக்கு தமிழர் தலைவர் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்களின் 136ஆவது ஆண்டு பிறந்த நாளான இன்று (29.4.2026) காலை 10.30 மணியளவில் சென்னை கடற்கரை காமராசர் சாலையில் அமைந்துள்ள அவரது சிலைக்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மலர்மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்வில் திராவிடர் கழகப் பொருளாளர் வீ.குமரேசன், திராவிடர் கழக சட்டத்துறைத் தலைவர் வழக்குரைஞர் த.வீரசேகரன், திராவிடர் கழக செயலவைத் தலைவர் வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி, மாநில ஒருங்கிணைப்பாளர் பொன்னேரி வி.பன்னீர்செல்வம், மாநில கிராமப் பிரச்சாரக் குழு அமைப்பாளர் முனைவர் அதிரடி க.அன்பழகன், மாநில இளைஞரணி இணைச் செயலாளர் சோ.சுரேஷ்,  பகுத்தறிவாளர் கழக மாநில தலைவர் இரா.தமிழ்ச்செல்வன், பொதுச் செயலாளர் ஆ.வெங்கடேசன், சி.வெற்றிச்செல்வி, அ.சுதா அன்புராஜ், தங்க.தனலட்சுமி, த. இளவரசி, மரகதமணி, மு.பவானி, திராவிட இலக்கியா, திராவிட எழில், பூவை செல்வி, தங்கமணி, பெரியார் இனியா,  பெரியார் ஆதவன்.

தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், வழக்குரைஞர் சண்முகப்பிரியன், சென்னை மேற்கு மாவட்டத் தலைவர் கரு.அண்ணாமலை, செயலாளர் சுப்பிரமணியன், அரும்பாக்கம் சா.தாமோதரன்,  பழனிபாலு, அய்ஸ் அவுஸ் அன்பு, எம்.ஆர்.மாணிக்கம், பெரியார் மாணாக்கன், சூளைமேடு பி.டி.சி.ராஜேந்திரன், சூளைமேடு சேகர், நீலாங்கரை ஆர்.டி.வீரபத்தின்.

கொடுங்கையூர் கோ.தங்கமணி, கோவர்த்தன், .கோபாலகிருஷ்ணன், செல்லப்பன், கவிஞர் வீரமுத்து, முரளி, மகேஷ், தமிழ்ச்செல்வன், தாம்பரம் சு.மோகன்ராஜ், மகேந்திரன், சுப்பிரமணியன், அப்துல்லா மற்றும் பெருந்திரளான கழகத் தோழர்கள் பங்கேற்று மரியாதை செலுத்தினர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *