திண்டுக்கல்லில் புதிய தோழர்கள், மாணவர்கள், இளைஞர்கள் நமது தோழர்களை எளிதில் தொடர்பு கொள்ளும் விதமாக திண்டுக்கல் மாவட்ட தலைவராக வழக்குரைஞர் ஆனந்த முனிராசன் பொறுப்பேற்றபின் தொடர்ந்து தெருமுனைக் கூட்டங்கள் நடத்தி தற்போது நாடாளுமன்ற தேர்தலுக்கு இந்தியா கூட்டணிக்குப் பிரச்சாரம் செய்து மீண்டும் கழகப்பணியை துவக்கியுள்ளதன் அடையாளமாக திண்டுக்கல்லில் தற்போது பேருந்து நிலையத்தின் சில அடிகள் எதிராக திராவிடர்கழக மாவட்ட அலுவலகத்தினை திறந்துள்ளார். நமது இயக்க தோழர்களும், மாணவர்களும், விடுதலை ,பெரியார் பிஞ்சு, உண்மை , மார்டன் ரேசனலிஸ்ட் சந்தா , மாதாந்திர கூட்டங்கள், பெரியார் விடுதலை வாசகர் வட்டத்திற்கும் மேற்படி கழக அலுவலகத்தினை பயன்படுத்துமாறு மாவட்ட செயலாளர் கே.ஆர்.காஞ்சித்துரை கேட்டுக்கொண்டுள்ளார்.
திண்டுக்கல் பேருந்து நிலையத்திற்கு எதிரில் திராவிடர் கழக அலுவலகம்
1 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு. "விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
You Might Also Like
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
