கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 19.4.2026

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

* எதிர்க்கட்சிகளின் ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி; பாஜக இன்னும் தோல்வியைச் சந்திக்கும். தொகுதி மறுவரையறை மசோதா நாமக்கல்லில் நாம் பற்ற வைத்த தீ, நாடாளுமன்றத்தில் சாம்பலாக்கியது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்.

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* பெண்கள் இட ஒதுக்கீடு என்ற முகமூடி அணிந்து,  நாட்டை அழித்திட பாஜக முயற்சி, தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் கண்டனம்.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* பெண்களுக்கு உடனடியாக இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை காங்கிரஸ் மீண்டும் வலியுறுத்தல். அரசின் ‘மாறிவரும் நிலைப்பாடுகள்’  மீது கடுமையான விமர்சனம்.

தி இந்து:

* பெண்களுக்கான இட ஒதுக்கீட்டுச் சட்டத்தை தொகுதி மறுவரையறை செயல்முறையில் இருந்து பிரிக்கக் கோரி இந்தியா  கூட்டணி பிரதமருக்குக் கடிதம் ஆலோசனை.

* நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி, பாஜகவின் காவிக் கொடியை வீழ்த்தி உள்ளது. போர் என்றால் வெற்றி ஒன்றுதான் நமது இலக்கு. நாம் வச்ச குறி தப்பவில்லை. இதுதான் திமுக. இதுதான் தமிழ்நாடு. இதுதான் திராவிட மாடல்.  மு.க.ஸ்டாலின் வெற்றிப் பெருமிதம்

* ‘‘என்கிட்ட மோதாதே… இது பெரியாரின் தமிழ்நாடு.டா… வம்புக்கு இழுக்காதே… இது அண்ணாவின் கோட்டையடா…’’ என பாட்டு பாடி முதலமைச்சர் தரமான பதிலடி

டைம்ஸ் ஆப் இந்தியா:

* எதிர்க்கட்சிகளின் ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி கூட்டாட்சி கட்டமைப்பை மாற்றும் ஒன்றிய அரசின் சதி முறியடிப்பு: பிரியங்கா பேட்டி

– குடந்தை கருணா

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *