டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* எதிர்க்கட்சிகளின் ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி; பாஜக இன்னும் தோல்வியைச் சந்திக்கும். தொகுதி மறுவரையறை மசோதா நாமக்கல்லில் நாம் பற்ற வைத்த தீ, நாடாளுமன்றத்தில் சாம்பலாக்கியது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* பெண்கள் இட ஒதுக்கீடு என்ற முகமூடி அணிந்து, நாட்டை அழித்திட பாஜக முயற்சி, தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் கண்டனம்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* பெண்களுக்கு உடனடியாக இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை காங்கிரஸ் மீண்டும் வலியுறுத்தல். அரசின் ‘மாறிவரும் நிலைப்பாடுகள்’ மீது கடுமையான விமர்சனம்.
தி இந்து:
* பெண்களுக்கான இட ஒதுக்கீட்டுச் சட்டத்தை தொகுதி மறுவரையறை செயல்முறையில் இருந்து பிரிக்கக் கோரி இந்தியா கூட்டணி பிரதமருக்குக் கடிதம் ஆலோசனை.
* நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி, பாஜகவின் காவிக் கொடியை வீழ்த்தி உள்ளது. போர் என்றால் வெற்றி ஒன்றுதான் நமது இலக்கு. நாம் வச்ச குறி தப்பவில்லை. இதுதான் திமுக. இதுதான் தமிழ்நாடு. இதுதான் திராவிட மாடல். மு.க.ஸ்டாலின் வெற்றிப் பெருமிதம்
* ‘‘என்கிட்ட மோதாதே… இது பெரியாரின் தமிழ்நாடு.டா… வம்புக்கு இழுக்காதே… இது அண்ணாவின் கோட்டையடா…’’ என பாட்டு பாடி முதலமைச்சர் தரமான பதிலடி
டைம்ஸ் ஆப் இந்தியா:
* எதிர்க்கட்சிகளின் ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி கூட்டாட்சி கட்டமைப்பை மாற்றும் ஒன்றிய அரசின் சதி முறியடிப்பு: பிரியங்கா பேட்டி
– குடந்தை கருணா

