கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 21.7.2026

3 Min Read

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக்கோரி டில்லியில் பேரணி; இளைஞர்கள் மீது தடியடி, கண்ணீர் புகை வீச்சு: அலைஅலையாய் திரண்டவர்களை காவல்துறையினர் தாக்கியதால் பதற்றம் நாடாளுமன்றத்தின் நுழைவாயில் மூடல்: இரவிலும் தொடர்ந்த போராட்டம்.

* மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது; முதல் நாளில் முடங்கியது நாடாளுமன்றம்: வினாத்தாள் கசிவு, ராமர் கோயில் விவகாரத்தை எழுப்பி கடும் அமளி.

* சோனம் வாங்சுக் தனது உண்ணாநிலைப் போராட்டத்தை தொடர்ந்தார்; சிஜேபி ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்து விட்ட காவல்துறையைக் கண்டித்து சோனம் முடிவு.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* பரபரப்புடன் தொடங்கிய மழைக்கால நாடாளுமன்ற கூட்டத்தொடர்: நாடாளுமன்ற நுழைவாயில்கள் மூடப்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு எழுப்பிய நிலையில், நீட் தேர்வு தாள் கசிவு முதல் ராமன் கோயில் காணிக்கை மோசடி குற்றச்சாட்டு வரை பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து முழக்கமிட்டதால் மக்களவை பலமுறை ஒத்திவைக்கப்பட்டது.

* திரிபுரா காவல்துறை தலைவர் அலுவலகத்தில் உயிரிழந்த நிலையில் கண்டெடுப்பு; தற்கொலையில் சந்தேகம். 1994-ஆம் ஆண்டு அய்பிஎஸ் அதிகாரியான திரிபுரா டிஜிபி அனுராக் தங்கர் அலுவலகத்தில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். மரணத்திற்கான காரணம் உடல் பரிசோதனைக்கு பிறகு தெரிய வரும் நிலையில், சம்பவம் குறித்து நீதித்துறை விசாரணை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* ஜே.பி.நட்டா உடன் போராட்டக் குழு பிரதிநிதிகள் சந்திப்பு: சிஜேபி முன்வைத்த 3 நிபந்தனைகள் என்னென்ன? ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும், நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்ட மாணவர்களுக்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 3 நிபந்தனைகளை ஒன்றிய அமைச்சர் ஜே.பி.நட்டாவிடம் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் முன்வைத்துள்ளனர்.

தி இந்து:

* உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 38 ஆக உயர்த்தும் மசோதா மக்களவையில் அறிமுகம். வழக்குகள் தேக்கம் அதிகரித்து வருவதால், உச்சநீதிமன்றத்தின் அங்கீகரிக்கப்பட்ட நீதிபதிகளின் எண்ணிக்கையை 34-லிருந்து 38 ஆக உயர்த்தும் அவசரச் சட்டத்திற்கு மாற்றாக ஒன்றிய அரசு மசோதாவை மக்களவையில் அறிமுகப்படுத்தியது.

* தேசிய கல்விக் கொள்கை அமல்படுத்தினால்தான் சமக்ரா சிக்ஷா நிதி: ஒன்றிய அரசு மீண்டும் வலியுறுத்தல். தமிழ்நாட்டுக்கு சமக்ரா சிக்ஷா திட்ட நிதி வழங்குவது தேசிய கல்விக் கொள்கை (NEP-2020) அமல்படுத்தலுடன் தொடர்புடையது என ஒன்றிய அரசு மீண்டும் தெரிவித்துள்ளது. அதேவேளையில், கல்வி உரிமைச் சட்டம் தொடர்பான நிதி உரிய நேரத்தில் வழங்கப்படும் என தயா நிதி மாறன் எம்.பி. எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய அமைச்சர் பதில்.

தி டெலிகிராப்:

* பதவி விலகக் கோரி போராட்டம் தீவிரம்; அமித் ஷாவுடன் தர்மேந்திர பிரதான் நீண்ட ஆலோசனை. தர்மேந்திர பிரதானின் பதவி விலகலை வலியுறுத்தி போராட்டங்கள் நடைபெறும் நிலையில், அமித் ஷாவுடன் அவர் நீண்ட ஆலோசனை நடத்தினார். நாடாளுமன்ற வளாகத்தில் பாதுகாப்பும் பலப்படுத்தப் பட்டது.

டைம்ஸ் ஆப் இந்தியா:

* ‘கல்விச் சுதந்திரத்தை அழிக்கும்’ – உயர்கல்வி அமைப்பு திருத்த மசோதாவுக்கு (VBSA) திரிணாமூல் எதிர்ப்பு: வி.பி.எஸ்.ஏ. மசோதா மாணவர் விரோதமானதும், கூட்டாட்சிக்கு எதிரானதும் என திரிணாமுல் காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. உயர்கல்வியை மய்யப்படுத்தி கல்விச் சுதந்திரத்தை பாதிக்கும் இந்த மசோதா ஒத்திவைக்கப்பட்டிருப்பது எதிர்க்கட்சிகளின் வெற்றி என்றும் தெரிவித்துள்ளது.

குடந்தை கருணா

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *