அந்தியூர், ஏப்.15- ஈரோடு மாவட்டம், அந்தியூர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் அதிமுக வேட்பாளர் அரி பாஸ்கர் தனது ஆதரவாளர்களுடன் வீதி வீதியாகச் சென்று வாக்கு சேகரித்தார். அப்போது, அவருக்கு வரவேற்பு அளிக்கும் வகையில் பெண்கள் பல இடங்களில் ஆரத்தி எடுத்தனர்.
வேட்பாளருக்கு வரவேற்பு கொடுத்த பெண்களுக்கு, அங்கு வந்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தலா ரூ. 100 விநியோகம் செய்ததாகக் கூறப்படுகிறது.தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் நிலையில், வாக்காளர்களைக் கவரும் வகையில் இவ்வாறு பணப்பட்டுவாடா செய்வது விதிமீறல் என்று சமூக ஆர்வலர்களும், மாற்றுக் கட்சியினரும் குற்றம் சாட்டியுள்ளனர்.
“பகிரங்கமாக பணப்பட்டுவாடா செய்த அதிமுகவினர் மீது தேர்தல் ஆணையம் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.
இந்த விவகாரம் தொடர்பான காட்சிப் பதிவுகள் மற்றும் புகார்கள் தேர்தல் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதால், அந்தியூர் தொகுதியில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.

