சென்னை, ஜூலை 2- தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று (1.7.2026) தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: மக்களின் உயிர்காக்கும் மகத்தான மனிதநேய தொண்டில் அர்ப்பணிப்போடு ஈடுபடும் மருத்துவர்கள் அனைவரையும் தேசிய மருத்துவர் நாளில் போற்றுகிறேன்.
இந்தியாவின் சிறப்பான மருத்துவ கட்டமைப்பை தமிழ்நாடு கொண்டிருப்பதிலும், மருத்துவ தலைநகராக திகழ்வதிலும் நம் மருத்துவர்களின் பங்கு தலையாயது. நீட் போன்ற சதிகளால் இதனை தகர்த்திட பார்க்கும் முயற்சிகளை வெற்றிகொள்ள இந்நாளில் உறுதியேற்போம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
நன்மைகளை அள்ளித்தரும் காலை நடைப்பயிற்சி
ஆரோக்கிய வாழ்வுக்கு வலுசேர்க்கும் எளிமையான உடற்பயிற்சியில் நடைப்பயிற்சி முக்கியமானது. அதில் உள்ள நன்மைகளை மருத்துவர்கள் பட்டியலிட்டுள்ளனர்.
l இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கும்.
l மூளை செயல்பாடுகளை தூண்டி, மனக் குழப்பங்களை நீக்கும்.
l ஊக்க மனநிலையை இயற்கையாக உயர்த்தும் எண்டோர்பின்களை வெளியிடும்.
l குறைந்த நேரத்தில் அதிக கலோரிகளை எரிக்கும்.
l தூக்கத்தின் தரத்தை மேம்படுத்தி, அதில் ஒழுங்கு முறையை கொண்டு வரும்.
