எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் போராட்டத்தால் மக்களவை ஒத்திவைப்பு!

1 Min Read

புதுடில்லி, மார்ச் 13 எரிபொருள் தட்டுப்பாடு குறித்து விவாதிக்கக் கோரி மக்களவையில் எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட் டதால் அவை நடவடிக்கைகள் முடங்கியது.

மத்திய கிழக்கு போர் காரணமாக வளைகுடா நாடு களில் இருந்து எரிபொருள் இறக்குமதி செய்ய முடியாத தால், நாடு முழுவதும் சமையல் சிலிண்டருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. வீட்டுப் பயன்பாட்டுக்கான சிலிண்ட ரும் பல்வேறு பகுதிகளில் கிடைப்பதில் சிக்கல் நீடித்து வருகின்றது.

இதுதொடர்பாக மக்கள வையில் விவாதிக்க வேண்டும் என்று மூன்றாவது நாளாக எதிர்க்கட்சி எம்பிக்கள் ஒத்தி வைப்பு தீர்மான நோட்டீஸை வழங்கியுள்ளனர். ஆனால், எரிபொருள் தட்டுப்பாடு குறித்து உடனடி யாக விவாதிக்க அனுமதிக்க முடியாது என்று அவைத் தலைவர் ஓம் பிர்லா தெரிவித்த நிலையில், காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து, பகல் 12 மணி வரை அவை நடவடிக்கைகளை ஒத்திவைப்பதாக ஓம் பிர்லா அறிவித்தார். இந்த நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சி உறுப்பினர்கள் சிலிண்டர் தட்டுப்பாடு தொடர்பான பதாகைகளுடன் போராட்டத் தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *