அமெரிக்கா- ஈரான் இடையேயான போரால் இந்தியாவில் எரிவாயு உருளை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் ஒரு எல்பிஜி எரிவாயு உருளை வாங்கியபின் மற்றொரு எரிவாயு உருளை வாங்குவதற்கான கால இடைவெளியை 21 நாட்களிலிருந்து 25 நாட்களாக ஒன்றிய அரசு உயர்த்தியது.
சமையல் எரிவாயு தட்டுப்பாடு நிலவி வரும் சூழலில் எரிவாயு உருளைகளை பதுக்கி கள்ளச் சந்தையில் விற்பதை தவிர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
“வீட்டு உபயோகத்திற்கு முன்னுரிமை.
ஒரு எரிவாயு உருளை பதிவு செய்த 25 நாட்களுக்குப் பிறகே அடுத்த எரிவாயு உருளை பதிவு செய்ய முடியும்.’’
பன்னாட்டு அளவில் நிலவும் அரசியல் பதற்றங்கள் நேரடியாக நம் வீட்டு அடுப்பங்கரையிலும், அன்றாட உணவிலும் எதிரொலிக்கத் தொடங்கிவிட்டன,” என குறிப்பிட்டுள்ளார்.
