டி.ஆர்.பி. நேரடி பணி நியமனத்தில் பகுதி நேர ஆசிரியர்களுக்கு சிறப்பு மதிப்பெண் 15 பள்ளிக் கல்வித்துறை அரசாணை

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, மார்ச்.7 டிஆர்பி நேரடி பணி நியமனத்தில் பகுதி நேர ஆசிரியர்களுக்கு சிறப்பு மதிப்பெண் 15 வழங்கி பள்ளிக் கல்வித் துறை அரசாணை வெளியிட்டுள்ளது.

சிறப்பு மதிப்பெண்

இதுதொடர்பாக பள்ளிக் கல்வித் துறை செயலர் பி.சந்திர மோகன் நேற்று (6.3.2026) வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது:

அரசு பள்ளிகளில் காலியாக இருக்கும் நிரந்தர சிறப்பு ஆசிரியர் பணியிடங்களில், பகுதிநேர சிறப்பு ஆசிரியர்களை நியமிக்க ஏதுவாக நேரடி நியமன தேர்வுகளில் பகுதி நேர பணிக்காலத்தை அடிப் படையாகக் கொண்டு அவர்களுக்கு சிறப்பு மதிப்பெண் அளிக்கப்படும் என கடந்த ஜன.24-ஆம் தேதி சட்டப் பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

இதைத் தொடர்ந்து, அனை வருக்கும் கல்வி திட்டத்தின்கீழ் பணியாற்றிவரும் பகுதிநேர சிறப்பு ஆசிரியர்களுக்கு ஒவ்வொரு பணி ஆண்டுக்கும் ஒன்றரை மதிப்பெண் வீதம் அதிகபட்சம் 15 மதிப்பெண் வழங்குமாறு அரசுக்கு பள்ளிக் கல்வி இயக்குநர் கருத்துரு அனுப்பினார்.

அதையேற்று சிறப்பு ஆசிரியர் நேரடி நியமனத்தில் பகுதிநேர சிறப்பு ஆசிரியர் களுக்கு ஒரு ஆண்டுக்கு ஒன்றரை மதிப்பெண் வீதம் அதிகபட்சமாக 15 சிறப்பு மதிப்பெண் அளிக்க ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு அனுமதி அளித்து அரசு ஆணையிடுகிறது.

இந்த சிறப்பு மதிப்பெண் சலுகை கடந்த 2011 முதல் தொடர்ந்து பணியில் இருக்கும் பகுதிநேர சிறப்பு ஆசிரியர்களுக்கு மட்டுமே பொருந்தும். அதேபோல், இந்த நடைமுறை அடுத்த 5 பணிநியமன தேர்வுகளுக்குப் பின்பற்றப்படும். இவ் வாறு அரசாணையில் கூறப்பட் டுள்ளது. ஓவியம், தையல், இசை, உடற்கல்வி உள்ளிட்ட சிறப்பு ஆசிரியர் நியமனத்துக்கு தற்போது மொத்தம் 100 மதிப்பெண் வழங்கப்படுகிறது. இதில் 95 மதிப்பெண் எழுத்துத் தேர்வுக்கானது.

எஞ்சிய 5 மதிப்பெண் வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்புக்கு வழங்கப்படும். எழுத்துத்தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படும்போது வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்புக்கான (சீனியாரிட்டி) மதிப்பெண் வழங்கப்படும்.

அந்த வகையில் தற்போது சான்றிதழ் சரிபார்ப்புக்கு வரும் போது வேலைவாய்ப்பு பதிவு மூப்புக்கான மதிப் பெண்ணுடன் கூடுதலாக சிறப்பு மதிப்பெண்ணாக 15 வழங்கப்படும் என்பது குறிப் பிடத்தக்கது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *