கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 6.3.2026

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

* மாநிலங்களவை எம்பி பதவிக்கு அமித்ஷா முன்னிலையில் நிதிஷ்குமார் மனுத்தாக்கல்: பீகார் முதலமைச்சர் பதவியிலிருந்து விலகுகிறார். மகன் துணை முதலமைச்சராக வாய்ப்பு. பீகார் முதலமைச்சர் பதவியில் இருந்து நிதிஷ்குமார் திடீர் விலகல்.. பாஜக அழுத்தமா? : ஜே.டி.யு. தொண்டர்கள் எதிர்ப்பு, ஆர்ப்பாட்டம்.

* பல்வேறு மசோதாக்களை நிறுத்திவைத்து குளறுபடி செய்த ஆளுநர் ஆர்.என்.ரவி அதிரடி மாற்றம்: மேற்கு வங்கத்துக்கு தூக்கியடிக்கப்பட்டார். கேரள ஆளுநர் ராஜேந்திர அர்லேகருக்கு தமிழ்நாடு ஆளுநராக கூடுதல் பொறுப்பு.

* சமஸ்கிருதத்தை வளர்க்கவே அக்கறை; தமிழ், தமிழ் என்று மக்களை ஏமாற்றும் ஒன்றிய அரசு: துணை முதலமைச்சர் உதயநிதி காட்டம்.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* நிதிஷ் ‘எங்களுடன் இருந்திருந்தால் இந்த நாளைக் கண்டிருக்க மாட்டார்’: பீகார் முதலமைச்சரின் மாநிலங்களவை நியமனத்திற்கு தேஜஸ்வி கருத்து. பீகாரில் அதிகார மாற்றம்: நிதிஷ் குமாரை பாஜக கடத்தி சென்றுவிட்டதாக தேஜஸ்வி விமர்சனம் மகாராட்டிராவில் என்ன நடந்ததோ அதன் மேம்பட்ட வடிவம் இது. கூட்டணி வைக்கும் கட்சிகளின் கதையை முடிக்கும் வரலாற்றைக் கொண்டது பாஜக.

தி இந்து:

* ‘பாபர் மசூதி குறித்து அன்றைய உ.பி. முதலமைச்சர் கல்யாண் சிங் அப்பட்டமான பொய்யைச் சொன்னார்’, முன்னாள் அட்டர்னி ஜெனரல் கே.கே. வேணுகோபால் பேட்டி.

தி டெலிகிராப்:

* பாஜகவின் ஆண்டு வருமானம் ரூ.6,769 கோடி: 2024-2025 ஆம் ஆண்டில் ஆறு தேசியக் கட்சிகள் (பாஜக, அய்என்சி, சிபிஅய்(எம்), ஆம் ஆத்மி, பிஎஸ்பி மற்றும் என்பிஇபி) மொத்த வருமானம் ரூ.7960.09 கோடி என்று அறிவித்தன, அதில் பாஜகவின் பங்கு 85.03 சதவீதமாகும்.

டைம்ஸ் ஆப் இந்தியா:

* ‘மோதல் நமது கொல்லைப்புறத்தை அடைந்து விட்டது’: இந்தியப் பெருங்கடலில் ஓர் ஈரானிய போர்க்கப்பல் மூழ்கடிக்கப்பட்டுள்ளது. ஆனால் பிரதமர் மோடி இதுவரை எதையும் கூறவில்லை; இப்படிப்பட்ட நேரத்தில், நாட்டை வழிநடத்த ஒரு உறுதியான தலைமை நமக்குத் தேவை, எக்ஸ் தளத்தில் ராகுல் பதிவு.

குடந்தை கருணா

 

- Advertisement -

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *