கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 24.5.2026

1 Min Read

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* கல்வி அமைச்சருக்கு எதிரான பிரச்சாரத்தை தொடர்ந்து கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் அனைத்து கணக்குகளும் முடக்கம்: ஒன்றிய அரசின் ஒடுக்குமுறை: நிறுவனர் அபிஜித் குற்றச்சாட்டு

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* எரிபொருள் விலை உயர்வு குறித்து பிரதமர் மோடியிடம் காங்கிரஸ் 4 கேள்விகளை எழுப்பியது: ‘இப்போதே இப்பிரச்சினையைத் தீருங்கள்’ரஷ்யாவிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் விவகாரத்தை அரசு கையாண்ட விதத்தையும் காங்கிரஸ் விமர்சித்தது; இந்தியா தனது எரிசக்தி நலன்களை சுதந்திரமாகத் தீர்மானிப்பதற்கு பதிலாக, பிறரிடம் “அனுமதி” கோருவதாக அது குற்றச்சாட்டு.

தி இந்து:

* நீட் யு.ஜி.2026 தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக, தேசியத் தேர்வு முகமையை (NTA) கலைக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) வலியுறுத்தியது. மேலும், நாட்டின் மய்யப்படுத்தப்பட்ட தேர்வு முறையில் தொடர் தோல்விகளும் நம்பகத்தன்மை இழப்பும் ஏற்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டி, ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்றும் அக்கட்சி கோரியது.

தி டெலிகிராப்:

* அதானிக்காக ஆறு லட்சம் மரங்கள் வெட்டப்படுகிறது: – ஜெய்ராம் ரமேஷ் தகவல். “இப்பகுதி சுமார் 7,000 ஏக்கர் பரப்பளவைக் கொண்டது. இங்குள்ள காடுகளின் செழுமை மற்றும் யானை வழித்தடங்கள் அமைந்திருப்பதன் காரணமாக, 2011-ஆம் ஆண்டில் சுரங்கப் பணிகளுக்குத் தடை விதிக்கப்பட்ட ‘NO-GO’ (நுழையக்கூடாத) மண்டலத்தின் ஒரு பகுதியாக இது கருதப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், 6 லட்சத்திற்கும் அதிகமான மரங்கள் வெட்டப்பட உள்ளன,” என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் எக்ஸ் தளத்தில் பதிவு.

குடந்தை கருணா

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *