தமிழ்நாட்டில் அபார வளர்ச்சிப் பணிகள் ரூ. 4 ஆயிரத்து 814 கோடியில் 13 சாலைகள் – பாலம்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

 சென்னை, பிப். 28– தமிழ்நாட்டில் ரூ.4,813.92 கோடியில் கட்டப்பட்ட 13 சாலைகள் மற்றும் ஒரு பாலம் மற்றும் ரூ1,970.57 கோடியில் அமைக்கப்பட்ட 38 துணை மின் நிலையங்கள் உள்ளிட்டவற்றை முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இதுகுறித்து அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

சாலைகள் – பாலம்

தலைமைச் செயலகத்தில், நெடுஞ்சாலைத் துறை சார்பில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, தஞ்சாவூர், மயிலாடுதுறை, கடலூர், கள்ளக்குறிச்சி, தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி திருவாரூர், நாகப்பட்டினம், சேலம், நாமக்கல் மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் ரூ.4,712.55 கோடியில் 13 சாலைகள் மற்றும் திருச்சி- கரூர் மாவட்டங்களில் ரூ.101.37 கோடியில் கட்டப்பட்ட பாலத்தையும் மக்கள் பயன்பாட்டுக்காக காணொலியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். மேலும், மயிலாடுதுறை மாவட்டத்தில் ரூ.113 கோடியில் அமைக்கப்பட உள்ள புறவழிச்சாலைப் பணிக்கு அடிக்கல் நாட்டினார்.

உள்துறை சார்பில், மதுரையில் ரூ.1.45 கோடி செலவில் அறிவுரைக் குழும அலுவலகக் கட்டடத்தை திறந்து வைத்த முதலமைச்சர், ரூ.137.04 கோடியில் குற்றம் மற்றும் குற்றவாளிகள் கண்காணிப்பு வலைபின்னல் அமைப்பு 2.O மற்றும் டிஜிட்டல் கைரேகை சேகரிப்பு அமைப்பையும் தொடங்கி வைத்தார்.

துணை மின் நிலையம்

இதுதவிர, வாகனங்களில் வாகன இருப்பிட கண்காணிப்புக் கருவி அமைக்கும் திட்டத்துக்காக ரூ.7.24 கோடியில், ஒருங்கிணைந்த கண்காணிப்பு கட்டுப்பாட்டு மய்யம், 7 வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் கணினிமயமாக்கப்பட்ட தானியங்கி ஓட்டுநர் தேர்வுத்தளங்கள் ஆகியவற்றையும் தொடங்கி வைத்தார்.

அத்துடன் 53 மோட்டார் வாகன ஆய்வாளர் பணியிடங்களுக்கான நியமன ஆணைகளையும் வழங்கினார்.

மேலும் தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம் மற்றும் தமிழ்நாடு மின்பகிர்மானக் கழகத்தின் சார்பில் ரூ.1,970.57 கோடியில்பல்வேறு மாவட்டங்களில் நிறுவப்பட்டுள்ள 38 புதிய துணை மின் நிலையங்களை திறந்து வைத்தார்.

மேலும், தூத்துக்குடி அணியாபரநல்லூரில் ரூ.46.65 கோடியில், புதிய பால்பண்ணை, திட்டக்குடியில் ரூ.33 கோடியில் கால்நடை தீவன உற்பத்தி ஆலை மற்றும் நீலகிரியில் பாலாடைக் கட்டி தயாரிக்கும் தொழிற்சாலை ஆகியவற்றை முதலமைச்சர் திறந்தார்.

இதுதவிர, 7 பால் பண்ணைகளில் ரூ.29.93 கோடியில் தானியங்கி பால் பாக்கெட்கள் அடுக்கும் இயந்திரங்கள் நிறுவும் பணிகள், மதுரை- சாத்தமங்கலம், திருச்சி- கொட்டப்பட்டுபால் பதப்படுத்தும் ஆலைகளை ரூ.67.62 கோடியில் தானியங்கி ஆலைகளாக மேம்படுத்தும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

சேலம், விருதுநகர் அரசு அருங்காட்சியக கட்டடங்களை திறந்தார். மேலும், ரூ.248.66 கோடியில் கட்டப்படவுள்ள திருவண்ணாமலை, மாமல்லபுரத்தில் தமிழர் பண்பாட்டு அருங்காட்சியக புதிய கட்டடங்கள், சென்னையில் சிந்துவெளிப் பண்பாட்டு அரங்கம் ஆகியவற்றுக்கும் அடிக்கல் நாட்டினார். இவைதவிர, பட்டுவளர்ச்சித் துறையின் சார்பில் தேர்வான 11 விருதாளர்களுக்கு ரூ.8 லட்சம் பரிசுத்தொகை வழங்கினார்.

- Advertisement -

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *