தோல்வி என்பது முடிவல்ல; அது ஒரு புதிய தொடக்கம் தலைவர் கலைஞர் காட்டிய வழியில் மீண்டும் எழுவோம்: கனிமொழி எம்.பி. உறுதி

சென்னை, மே 5- ‘கழகத்திற்கு தோல்விகள் புதிதல்ல. அதிலிருந்து கற்ற பாடங்களும் குறை வல்ல. இந்தத் தேர்தல் முடிவுகளிலிருந்து புதிய பாடங்கள் கற்போம். தோல்வி என்பது முடி வல்ல, அது ஒரு புதிய தொடக்கம். புதிதாக ஆட்சி அமைக்கவுள்ள அரசுக்கு வாழ்த்துகள்’ என திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவித்துள்ள தாவது; “ஜனநாயகத்தின் எஜமானர் களான மக்களின் தீர்பை ஏற்கிறோம்.

தோல்வி என்பது முடிவல்ல, அது ஒரு புதிய தொடக்கம் என்று தன் வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் நமக்கு உணர்த்தியவர் தலைவர் கலைஞர்.

கழகத்திற்கு தோல்விகள் புதிதல்ல. அதிலிருந்து கற்ற பாடங்களும் குறைவல்ல. இந்தத் தேர்தல் முடிவுகளிலிருந்து புதிய பாடங்கள் கற்போம். சமூகத்தின் அடித்தளத்திலிருந்து இன்னும் வலிமையோடு செயல்படுவோம். அரசியல் – பண்பாட்டு உரிமை களைக் காக்கும் நம் வரலாற்றுப் பணியை நவீன சிந்தனைகளோடு தொடர்ந்து மேற்கொள் வோம்.

வெற்றி பெற்ற அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும், புதிதாக ஆட்சி அமைக்கவுள்ள அரசுக்கும் வாழ்த்துகள்” எனவும் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *