‘நீட்’ தேர்வால் இன்னும் என்னென்ன நடக்குமோ! ‘நீட்’ தேர்வு நெருக்கடி: லக்னோவில் தந்தையைத் துண்டு துண்டாக வெட்டி டிரம்மில் அடைத்த மகன்!

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

லக்னோ, பிப்.27 உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில், நீட் (NEET) தேர்வுக்குப் படிக்குமாறு வற்புறுத்திய தொழிலதிபரான தந்தையை, அவரது மகனே கொடூரமாகக் கொலை செய்து உடல் பாகங்களை டிரம்மில் மறைத்து வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லக்னோவைச் சேர்ந்த தொழி லதிபர் மன்வேந்திர சிங் (49). இவரது மகன் அக்சத் பிரதாப் சிங் (21). மன்வேந்திர சிங் தனது மகனை எப்படியாவது மருத்துவர் ஆக்க வேண்டும் என்ற நோக்கத்தில், அவரை நீட் தேர்வுக்குத் தயாராகும்படி தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால், அக்சத் சிங்கிற்கு மருத்துவம் படிக்க விருப்பம் இல்லாததால், இது தொடர்பாக தந்தைக்கும் மகனுக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதங்கள் ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மன்வேந்திர சிங் திடீரென காணாமல் போனார்.

இதனால் அதிர்ச்சி யடைந்த உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் மன்வேந்திர சிங்கின் வீட்டிற்குச் சென்று காவல்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, வீட்டில் இருந்த ஒரு ஊதா நிற பிளாஸ்டிக் டிரம்மை சோதித்தபோது, அதில் மனித உடல் உறுப்புகள் துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் இருப்பதைக் கண்டு காவல்துறையினர்  அதிர்ச்சியடைந்தனர். அவை காணா மல் போன மன்வேந்திர சிங்கின் உடல் பாகங்கள் என்பது உறுதி செய்யப்பட்டது.

இது தொடர்பாக அவரது மகன் அக்சத் சிங்கிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். ஆரம்பத்தில் முன்னுக்குப் பின் முரணாகப் பேசிய அவர், பின்னர் தனது தந்தையைக் கொலை செய்ததை ஒப்புக் கொண்டார்.

நீட் தேர்வுக்குப் படிக்குமாறு தந்தை கொடுத்த அதீத அழுத்தமே இந்தக் கொலைக்குக் காரணம் என அவர் வாக்குமூலம் அளித்துள்ளதாகத் தெரிகிறது.

இந்தக் கொடூரச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய் துள்ள காவல்துறை அக்சத் சிங்கை கைது செய்துள்ளனர். (‘நீட்’டுக்காக) தந்தை என்றும் பாராமல் மகனே செய்த இந்தச் செயல் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *