பிறகோள் உயிரினங்கள் குறித்து இதுவரை எந்த ஒரு சான்றும் இல்லை: பராக் ஒபாமா

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

நியூயார்க், பிப். 19- வேற்றுக் கோள்களில் உயிரினங்கள் இருப்ப தற்கான வாய்ப்புகள் இருந்தாலும், அவா்கள் பூமியைத் தொடா்பு கொண்ட தற்கான எந்த ஓர் ஆதாரத்தையும் நான் பார்த்ததில்லை’ என்று அமெரிக்க முன்னாள் அதிபா் பராக் ஒபாமா விளக்கம் அளித்துள்ளார்.

முன்பொருமுறை, இணையதள நிகழ்ச்சி ஒன்றில், வேறு கோள்களில் உயிரினங்கள் உண்மையாகவே இருக் கிறார்களா என்ற கேள்விக்கு, ‘ஆமாம், அவா்கள் உண்மையானவா்கள்’ என்று ஒபாமா பதிலளித்தது சமூக ஊடகங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியது.

இதைத் தொடா்ந்து, ஒபாமா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அளித்த விரிவான விளக்கத்தில், ‘இந்தப் பிரபஞ்சம் கற்பனையில்கூட அளவிட முடியாத அளவுக்கு பரந்து விரிந்தது. எனவே, எங்கோ ஓா் இடத்தில் உயிர்கள் இருப்பதற்கான வாய்ப்பு மிக அதிகம். தூரமும் மிக அதிகம் என்பதால், அங்கு வாழும் உயிரினங்கள் நம்மைத் தேடி வந்திருக்க வாய்ப்பில்லை.

நான் அதிபராக இருந்த காலகட்டத்தில், பிறகோள் உயிரினங்கள் நம்மைத் தொடா்பு கொண்டதற்கான எந்தவொரு ரகசிய ஆதாரத்தையும் நான் பார்க்கவில்லை’ என்று தெளிவுபடுத்தியுள்ளார்.

அமெரிக்காவில் ‘ஏரியா 51’ எனும் ரகசிய இடத்தில், பிறகோள் உயிரினங்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாகப் பல ஆண்டுகளாக நிலவி வரும் வதந்திகளையும் ஒபாமா மறுத்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *