பாட்னா, பிப்.10- பீகார் மாநிலம் மதேபுரா மாவட்டத்தில் உள்ள மேம்படுத்தப்பட்ட அரசு நடுநிலைப் பள்ளியில் 7-2-2026 அன்று மதிய உணவு சாப்பிட்ட 70 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு பாதிக் கப்பட்டனர்.
உடல்நலம் பாதிக்கப் பட்ட அனைத்து குழந்தை களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பெரும்பாலான குழந்தை களின் உடல் நிலை சீராக இருந்தபோதிலும், ஒரு சிறுமியின் நிலை கவலைக்கிடமாக இருப்ப தாகத் தெரிவிக்கப்பட்டது. அவருக்கு மருத்துவக் கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
உணவில் பல்லி விழுந் திருக்கலாம் என அப்பகுதி மக்கள் சந்தேகிக்கின்றனர்.
இதற்கிடையில், பெற்றோர்கள் மருத்துவ மனையில் கூடி, இந்தச் நிகழ்வு குறித்து தங்கள் கோபத்தை வெளிப் படுத்தியதுடன், இதற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
