புதுடில்லி, மே 24- யூனியன் பிரதேசமான அந்தமானின் நிக்கோபார் தீவில் மோடி அரசு திட்டமிட்டுள்ள உள்கட்டமைப்புத் திட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி இணையத்தில் வெளியிடப்பட்ட மனு ஒன்றில், 2.10 லட்சத்திற்கும் அதிகமானோர் கையெழுத் திட்டுள்ளனர்.
முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களால் முன்மொழியப்பட்ட நிலையான கிராமப்புற வளர்ச்சி உத்தியான ‘புரா’ (PURA – Providing Urban Amenities in Rural Areas) அமைப்பால் முன்னெடுக்கப்பட்ட இந்த மனு, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, ஒன்றிய சுற்றுச்சூழல், வனம் மற்றும் கால நிலை மாற்ற அமைச்சகம், வனவிலங்குக ளுக்கான தேசிய வாரியம் ஆகியவற்றுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
மனுவில்,”அந்தமான் நிக்கோபார் தீவுக் கூட்டத்தின் தென்கோடியில் உள்ளது கிரேட் நிக்கோபார் தீவுகள். இது பசுமையான மரங்களை கொண்ட அழகிய தீவு ஆகும். இங்கு பல உள்கட்டமைப்புத் திட்டங்களைச் செயல் படுத்த ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. அதாவது ஒரு பன்னாட்டு சரக்குப் பெட்டக மாற்று முனை யம், ஒரு புதிய பசுமைக்காட்டு விமான நிலை யம், ஒரு நகரியம் மற்றும் ஒரு மின் உற்பத்தி நிலையம் ஆகியவை அடங்கும். இந்த உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு உயிரி யலாளர்கள், சமூக விஞ்ஞானிகள், சுற்றுச் சூழல் ஆர்வலர்கள், ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள் உள்ளிட்ட குடிமக்கள் பல கவலைகளை எழுப்பியுள்ளனர். குறிப்பாக, திட்டங்களுக்காக வெட்டப்பட வாய்ப்புள்ள மரங்களின் எண்ணிக்கையை அரசாங்கம் குறைத்து மதிப்பிட்டுள்ளது. அதே போல குறைபாடுள்ள சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு, உள்ளூர் சமூகங்களின் எதிர்ப்பைப் புறக்க ணித்தது, திட்டங்களைச் செயல்படுத்து வதற்கான அனுமதிகளை வழங்குவதற்காக வன உரிமைச் சட்டம் உள்ளிட்ட சட்டங்களும் அடாவடியாக மீறப்பட்டுள்ளது.
மழைக்காடுகள் அழியும்
அந்தமான் தீவுகளின் முக்கிய அடை யாளம் கடலும், மழைக்காடுகளும் தான். மோடி அரசின் கார்ப்பரேட் ஆதரவு உள்கட்டமைப்புத் திட்டங்களால் 130 ச.கி., பரப்பளவிலான மழைக்காடுகள் அழிக்கப்பட்டு, 9.6 லட்சம் மரங்கள் வெட்டப்பட உள்ளன. சில வல்லுநர்கள் இந்த எண்ணிக்கை கிட்டத்தட்ட பத்து லட்சத்தை தாண்டும் என்று கூறியுள்ள னர். மிக முக்கியமாக இந்தத் துறைமுகத் திட்டம் தீவின் தென்கிழக்கு பகுதியில் உள்ள கலாத்தியா வளைகுடாவின் பல்லுயிர் பெருக் கத்திற்கு அச்சுறுத்தலாக அமையும்.
உள்கட்டமைப்பு திட்டங்களுக்காக அந்தமானின் பூர்வகுடி பழங்குடியின ரான ஷோம்பென், நிக்கோபாரிஸ் இன மக்களை இடம்பெயரச் செய்து பாதிப்பை ஏற்படுத்தும். முறையான சுற்றுச்சூழல், சமூக பாதிப்பு மதிப்பீடுகள் இத் ்திட்டங்களுக்குச் செய்யப்படவில்லை. அதிக நில அதிர்வு மண்டலமாகவும், சுனாமியால் பாதிக்கப்படக்கூடிய பகுதியாகவும் இருக்கும் ஒரு பிராந்தி யத்தில் இத்திட்டங்கள் முன்மொழி யப்பட்டுள்ளது சந்தேகத்தை கிளப்பி யுள்ளது” என்று அந்த மனுவில் குறிப் பிடப்பட்டுள்ளது.
