இதுதான் குஜராத் மாடல்! சிறுமி 3 ஆண்டுகளாக வன்கொடுமை; 8 பேர் கைது

1 Min Read

காந்திநகர், ஏப்.20 குஜராத்தில் 17 வயது சிறுமி 3 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கொடூரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
கேதா மாவட்டத்தில் உள்ள கிராமத்தை சேர்ந்த அந்த சிறுமியை கடந்த 2023 ஆம் ஆண்டு பர்வேஸ்கான் பதான் என்ற 23 வயது வாலிபர் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதை காட்சிப் பதிவு செய்து, தனது நண்பர்களுக்கு காண்பித்துள்ளான். அந்த காட்சிப் பதிவை வைத்து அவனும் அவனது நண்பர்களும் சிறுமியை கடந்த 3 ஆண்டுகளாக பல்வேறு சந்தர்ப்பங்களில் வன்கொடுமை செய்து வந்துள்ளனர்.
மிகவும் மன உளைச்சலுக்கு ஆளான சிறுமி உறுதியுடன் இறுதியாக பெற்றோரிடம் இதை கூறியுள்ளார். அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடி யாக காவல்துறையில் புகார் அளித்துள் ளனர்.

காவல்துறையினர் போக்சோ உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து பர்வேஸ்கான் பதான் உள்பட 8 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அனைவரும் 19 வயது முதல் 26 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவர். தலைமறைவாக உள்ள மற்றொருவனை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *