பிஜேபி மூத்த தலைவர் கருத்துக்கு காங்கிரஸ் கண்டனம்
புதுடில்லி, ஜன.6 டில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் தான் வெற்றி பெற்றால் தொகுதியின் சாலைகளை பிரியங்கா காந்தியின் கன்னத்தைப் போல பளபளப்பான அமைப்போம் என்று கல்காஜி தொகுதி பாஜக வேட்பாளர் ரமேஷ் பிதுரி கூறியது சர்ச்சையாகியுள்ளது.
தேர்தல்
டில்லியில் அடுத்த மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெறு கிறது. டில்லி கல்காஜி தொகுதியில் பா.ஜனதா பேட்டியிடுகிறது.
இ்ங்கு போட்டியிடும் ரமேஷ் பிதுரி ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது ‘‘நான் உங் களுக்கு உறுதியளிக்கிறேன், ஒக்லா மற்றும் சங்கம் விகா ரின் சாலைகளை மாற்றியது போல, கல்காஜியின் சாலை களை பிரியங்கா காந்தியின் கன்னங்களைப் போல பள பளப்பாக்குவோம்” என்று தெரி வித்திருந்தார். இது தொடர்பான காட்சிப் பதிவு பரவி சர்ச்சையை கிளப்பி உள்ளது.
கண்டனம்
பிதுரியின் இந்த சர்ச் சைக்குரிய கருத்துக்கு காங் கிரஸ் கட்சி கடுமையாக எதிர் வினையாற்றியுள்ளது. அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஷ்ரினேட், “பாஜக எப்போதும் பெண்களுக்கு எதிரான கட்சி. பிரியங்கா காந்தி குறித்த அக்கட்சியின் ரமேஷ் பிதுரியின் கருத்து கேவலமானது மட்டும் இல்லை, அவரது கேவலமான மனநிலையையும் குறிக்கிறது. தனது சக நாடாளுமன்ற உறுப்பினரை நாடாளுமன்றத்தில் கேவலப்படுத்தி விட்டு தண்டனையின்றி தப்பித்த ஒருவரிடம் இருந்து வேறு என்னதான் எதிர்பார்க்க முடியும்?” என்று தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், பாஜக தலைவர் பிரியங்கா காந்தியிடம் கைகூப்பி மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் சுப்ரியா வலியுறுத்தியுள்ளார்.
உண்மை முகம்
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பவன் கெரா இதே கருத்துகளை பிரதிபலித்துள்ளார். அவர் கூறுகையில், “இந்த திமி ரான கருத்து அவரது (ரமேஷ் பிதுரி) மனநிலையை மட்டும் காட்டவில்லை. அது அவர்களின் உண்மையான தலைவர்களின் உண்மை முகத்தைக் காட்டுகிறது. பாஜகவில் மேலிருந்து கீழ் வரையுள்ள இதுபோன்ற குட்டித் தலைவர்களிடம் ஆர்எஸ்எஸின் மனநிலையைக் காணலாம்” என்று தெரிவித்துள்ளார்.
ஆம் ஆத்மி கண்டனம்
ரமேஷ் பிதுரியின் கருத்துக்கு இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஆம் ஆத்மி கட்சியும் கண்டனம் தெரிவித்துள்ளது. அக்கட்சியின் எம்பி சஞ்சய் சிங், “இது மிகவும் கேவலமானது. நாடாளுமன்றத்தில் அவதூறு வார்த்தைகளில் பேசியவருக்கும், வாக்களர்களுக்கு வெளிப்படையாக பணம் கொடுத்தவர்களுக்கும் பாஜக தேர்தலில் நிற்க வாய்ப்பு கொடுத்துள்ளது. மூத்த காங்கிரஸ் தலைவர் மீதான இத்தகைய மலினமான மற்றும் கேவலமான கருத்து வாய்ப்புக் கேடானது. பாஜகவின் ஆட்சியில் பெண்களுக்கு எத்தகைய பாதுகாப்பு இருக்கும் என்று டில்லி மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.