முதலமைச்சர் பதவியிலிருந்து விலகும் கடிதத்தை ஆளுநருக்கு அனுப்பினார் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்

சென்னை, மே 5– தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் திமுகவிற்கு ஆட்சி அமைக்கத் தேவையான இடங்கள் கிடைக்காததால், முதலமைச்சர் பதவி விலகல் கடிதத்தை தமிழ்நாடு ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் அவர்களுக்கு மின்னஞ்சல் (E-mail) வாயிலாக அனுப்பியுள்ளர் மு.க.ஸ்டாலின்.

ஆளுநர் இதை ஏற்றுக் கொண்ட பிறகு, புதிய அரசு அமைவதற்கான நடவடிக்கைகள் தொடங்கும். அதுவரை தாற்காலிக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் தொடர வாய்ப்புள்ளது.

இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் வாழ்க்கையை உயர்த்த முதலமைச்சராக இருந்த முக ஸ்டாலின் தீட்டிய திட்டங்கள் ஏராளம்

ஒபிசி மாணவர் கூட்டமைப்பு

சென்னை, மே 5- முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அகில இந்திய ஓ.பி.சி. மாணவர் கூட்டமைப்பு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இதர பிற்படுத்தப்பட்ட சமூக மாணவ, மாணவிகளுக்கு மு.க.ஸ்டாலின் நிறைவேற்றிய திட்டங்கள் ஏராளம் என மாணவர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இதர பிற்படுத்தப்பட்ட மாணவ, மாணவிகளின் உரிமைகளைப் பாதுகாத்தவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். யுஜிசி கொண்டுவந்த சமூக சமத்துவ விதிமுறைகளுக்காக தேசிய அளவில் குரல் எழுப்பிய முதல் தலைவர் ஸ்டாலின். தமிழ்நாட்டில் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை முதலமைச்சர் ஸ்டாலின் ஊக்குவித்திருக்கிறார் எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

திமுகவின் தோல்வி
திராவிட அரசியலுக்கு பின்னடைவு

மீண்டு வருவார் ஸ்டாலின்” – சித்தராமையா நம்பிக்கை

பெங்களூரு, மே 5- கருநாடக முதலமைச்சர் சித்தராமையா நிருபர்களிடம் கூறியதாவது: தமிழ்நாட்டில் கிடைத்த வெற்றியின் அளவு எதிர்பாராததாக இருந்தது. ஆட்சிக்கு எதிரான மனநிலை பெரிதாக இல்லை. திமுக அரசின் நலத்திட்டங்கள் மக்கள் பாராட்டைப் பெற்றிருந்தன. வரலாற்று ரீதியாக பாஜவின் மதவாத அரசியலை நிராகரித்து வந்த தமிழ் வாக்காளர்கள், எப்போதும் விழிப்புணர்வுடன் வாக்களித்து வந்துள்ளனர்.

இளைஞர்கள் மற்றும் பெண்களில் சில பிரிவினர் நடிகர் விஜய்யின் திரைப்பட கவர்ச்சியால் ஈர்க்கப்பட்டிருப்பது கவலையளிக்கிறது. திமுகவின் இந்தத் தோல்வி, திராவிட அரசியல் பாரம்பரியத்திற்கு ஒரு குறிப்பிடத்தக்க பின்னடைவாகும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்தப் பின்னடைவிலிருந்து மீண்டு வருவார். மேலும், விஜய்யின் வெற்றிக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *