பாலியல் வன்கொடுமை, கொலைகள் நடந்தன என்று விவசாயிகள் போராட்டத்தை அசிங்கப்படுத்திய பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினருக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய விவசாயிகள்

2 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

புதுடில்லி, ஆக.28 விவசாயிகளின் போராட்டத்தின்போது உடல்கள் தொங்கவிடப்பட்டன. பாலியல் வன்கொடுமைகள் நடைபெற்றன’ என்று பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர் கங்கனா ரணாவத் தெரிவித்திருந்தார்.
கங்கனா ரணாவத்தின் இந்தக் கருத்துக்கு கண்டனம் தெரிவித்து அகில இந்திய கிசான் சபா (ஏஅய்கேஎஸ்) என்ற விவசாய சங்கத்தின் தலைவர் அசோக் தவாலே நேற்று முன்தினம் (26.8.2024) வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கங்கனா ரணாவத்தின் கருத்துகள் மிகவும் கண்டிக்கத்தக்கவை. விவசா யத்தை அழிக்க நினைக்கும் தனது “தலை வர்களை’ மகிழ்விப்பதற்காக இந்தக் கருத்துகளை கங்கனா தெரிவித்துள்ளார்.

ஒன்றிய அரசு கொண்டுவந்த மூன்று வேளாண் சட்டங்களும் நாட்டின் இறையாண்மையையும் உணவுப் பாதுகாப்பையும் சமரசம் செய்யும் வகையில் இருந்தன. அவற்றை எதிர்த்து கடுமையான தட்பவெப்ப நிலைமை, கரோனா பெருந்தொற்று பரவல் ஆகியவற்றைத் தாண்டி விவசாயிகளின் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் 736 பேர் உயிர்த் தியாகம் செய்தனர்.

சுதந்திரப் போராட்டத்துக்கு துரோகம் இழைத்து, ஆங்கிலேயரின் கைக்கூலிகளாகச் செயல்பட்ட மதவாத சக்திகளுக்கு விவசாயிகள் மற்றும் உழைக்கும் மக்களின் தேசபக்தி குறித்து கேள்வியெழுப்ப எந்த தார்மீக உரிமையும் இல்லை.

கங்கனா ரணாவத் தெரிவித்துள்ள கருத்துகளுக்காக பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும். விவசாயி களிடையே முரண்பாடுகளை ஏற்படுத் தும் நோக்கில் கங்கனாவின் கருத்துகள் இருப்பதால் இதை உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அசோக் தவாலே தெரிவித்துள்ளார்.

பாஜக மீது ராகுல் விமர்சனம்

“கங்கனாவின் கருத்து, விவசாயி களுக்கு எதிரான பாஜகவின் மன நிலையை காட்டுகிறது; மேற்கு உத்தர பிரதேசம், அரியானா மற்றும் பஞ் சாப்பை சேர்ந்த விவசாயிகளை அவமதிக்கும் வகையில் உள்ளது’ என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்தார்.

இது தொடர்பாக, அவர் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதி வில், “விவசாய சட்டங்களை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டு உயிர்த் தியாகம் செய்தவர்களை பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டவர்கள் போலவும் வெளிநாட்டினரின் கை கூலிகளாக செயல்பட்டவர்களாகவும் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் சித்தரித்துள்ளார்.

இது, விவசாயிகளுக்கு எதிரான பாஜகவின் மனநிலையை வெளிக் காட்டியுள்ளது. குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு (எம்எஸ்பி) சட்ட உத்தர வாதம் அளிப்பது குறித்த எந்த முன்னெடுப்பையும் ஒன்றிய அரசு இதுவரை மேற்கொள்ளவில்லை. போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிக ளின் குடும்பத்துக்கும் நிவாரணத்தொகை வழங்கப்படவில்லை. விவசாயிகளுக்கு தொடர்ந்து மோடி அரசு துரோகம் இழைத்து வருகிறது. எம்எஸ்பிக்கான சட்ட உத்தரவாதத்தை வழங்க இண்டியா கூட்டணி தொடர்ந்து போராடும்’ என குறிப்பிட்டார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *