டில்லி, ஜூன் 07 நாடு முழுவதும் வீட்டு உபயோக சமையல் எரிவாயு (LPG) உருளையின் விலை அதிரடியாக ரூ.29 உயர்த்தப்பட்டுள்ளது. பன்னாட்டு சந்தை நிலவரம் மற்றும் எண்ணெய் நிறுவனங்களின் இழப்பு காரணமாக இந்த விலை உயர்வு இன்று (ஜூன் 07) முதல் அமலுக்கு வருவதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
கடந்த 3 மாதங்களில் மட்டும் எரிவாயு உருளை விலை உயர்த்தப்படுவது இது இரண்டாவது முறை என்பதால் ஏழை, எளிய மற்றும் நடுத்தர குடும்பத்தினர், குறிப்பாக இல்லத்தரசிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக எரிவாயு உருளை விலை உயர்விற்குப் பின் முக்கிய நகரங்களில் விற்பனை செய்யப்படும் விலை விவரம்:நகரம்பழைய விலைபுதிய விலைஉயர்வுசென்னைரூ. 928.50ரூ. 957.50ரூ. 29.00டில்லி-ரூ. 942.00ரூ. 29.00கடந்த மார்ச் மாதம் எரிவாயு உருளை விலை ரூ.60 உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் ரூ.29 உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
