தி.மு.க. இளைஞரணிச் செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளான இன்று காலை பெரியார் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார் தமிழர் தலைவரிடம் வாழ்த்து பெற்றார்

2 Min Read
- Advertisement -

சென்னை, நவ.27 தி.மு.க. இளைஞரணிச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தன் பிறந்த நாளான இன்று (27.11.2026) காலை 9.30 மணிக்கு பெரியார் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம் பிறந்த நாள் வாழ்த்து பெற்றார்.

முன்னதாக அவரை திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ், துணைப் பொதுச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் ஆகியோர் வரவேற்று பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர்.

தமிழர் தலைவரிடம் வாழ்த்து

தி.மு.க. இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பெரியார் அருங்காட்சியத்தில் இருந்த திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களை சந்தித்தார். அவரை அன்பொழுக வரவேற்ற தமிழர் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து திராவிட இயக்க நூல்களை வழங்கி பிறந்த நாள் வாழ்த்துத் தெரிவித்தார். அவருடன் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன்  அவர்களும் இணைந்து வாழ்த்துத் தெரிவித்தார்.

1000 பேருக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கல்

சென்னை பெரியார் திடலில் சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மாவட்டச் செயலாளர், மேனாள் அமைச்சர் பி.கே. சேகர்பாபு ஏற்பாடு செய்திருந்த தி.மு.க. முன்னோடிகளுக்கான நலத் திட்ட உதவிகளை தனது பிறந்த நாளையொட்டி உதயநிதி ஸ்டாலின் வழங்கிச் சிறப்பித்தார்.

மேலும் மாற்றுத் திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனங்களை வழங்கினார். நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், மாநிலங்களவை உறுப்பினர்  இரா.கிரிராஜன், நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, சென்னை மாநகர மேயர் பிரியாராஜன், மேனாள் அமைச்சர்கள் வெள்ளக்கோயில் சாமிநாதன், டி.ஆர்.பி. ராஜா, மேனாள் சட்டமன்ற உறுப்பினர்கள் இரவிச்சந்திரன், பரந்தாமன், தாயகம் கவி, வழக்குரைஞர் தமிழன் பிரசன்னா, தி.மு.க. பகுதி செயலாளர் சுதாகர், வட்டச் செயலாளர் விஜயகுமார், மாமன்ற உறுப்பினர் இராஜேஸ்வரி சிறீதர், இளைஞரணி துணை அமைப்பாளர் வினோத் உள்ளிட்ட நிர்வாகிகளும், ஆயிரக்கணக்கான தி.மு.க. தொண்டர்களும் பங்கேற்றுஉதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *