தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் 616 குடியிருப்புகள் விற்பனை முக்கிய அறிவிப்பு!

- Advertisement -

சென்னை, நவ.27 தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் (TNHB), சென்னை மாநகரின் நான்கு முக்கியப் பகுதிகளில் கட்டப்பட்டுள்ள 616 குடியிருப்புகளை இணையதளக் குலுக்கல் முறையில் விற்பனை செய்வதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்த குடியிருப்புகள் சென்னையில் உள்ள அசோக் நகர், அரும்பாக்கம், பெசன்ட் நகர் மற்றும் பாடிக்குப்பம் ஆகிய நான்கு முக்கிய இடங்களில் அமைந்துள்ளன. உயர் வருவாய்ப் பிரிவு (HIG) மற்றும் மத்திய வருவாய்ப் பிரிவு (MIG) ஆகிய இரு பிரிவுகளின் கீழ் உள்ள இந்தக் குடியிருப்புகள் 1,430 முதல் 1,899 சதுர அடி பரப்பளவு கொண்டவை. இவற்றின் விலை ரூ.1.62 கோடி முதல் ரூ.3.25 கோடி வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் 28.11.2026 காலை 10.00 மணி முதல் 27.12.2026 இரவு 11.59 மணி வரை இணையவழியில் விண்ணப்பிக்கலாம். இதற்காக விண்ணப்பதாரர்கள் propertysales.tnhb.tn.gov.in அல்லது tnhb.tn.gov.in ஆகிய இணையதளங்களில் தங்களது கைபேசி எண் மூலம் பதிவு செய்து உள்நுழைந்து, தேவையான ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.:

உயர் வருவாய்ப் பிரிவுக்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.590 + பதிவுக் கட்டணம் ரூ.236 என மொத்தம் ரூ.826 ஆகவும் மத்திய வருவாய்ப் பிரிவுக்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.354 + பதிவுக் கட்டணம் ரூ.236 என மொத்தம் ரூ.590 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள், தேர்வு செய்யப்பட்ட 15 நிமிடங்களுக்குள் குடியிருப்பு விலையில் 10 சதவீதத் தொகையை முன்பணமாகச் செலுத்த வேண்டும். மீதமுள்ள 90 சதவீதத் தொகையை ஒதுக்கீடு செய்யப்பட்ட நாளிலிருந்து 105 நாட்களுக்குள் Internet Banking, Debit Card, IMPS அல்லது மின்-சலான் மூலமாகச் செலுத்த வேண்டும்.

இந்த ஒதுக்கீட்டில் பொதுப்பிரிவினருக்கு 38 சதவீதம், பட்டியல் சாதியினருக்கு 18  சதவீதம், மாநில அரசு ஊழியர்களுக்கு 18 சதவீதம். மத்திய அரசு, மின்வாரியம் மற்றும் உள்ளாட்சி அமைப்பு ஊழியர்களுக்கு 8 சதவீதம்,. முன்னாள் படைவீரர்கள் உள்ளிட்ட பாதுகாப்புப் படையினருக்கு 7 சதவீதம், சலவைத் தொழிலாளர்கள் மற்றும் முடிதிருத்துபவர்களுக்கு 4 சதவீதம் பணிபுரியும் பத்திரிகையாளர்களுக்கு 3 சதவீதம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய ஊழியர்களுக்கு 2 சதவீதம், பட்டியலின பழங்குடியினருக்கு 1 சதவீதம் மொழிப்போர் தியாகிகள் மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு 1 சதவீதம், மாற்றுத்திறனாளிகளுக்கு அனைத்துப் பிரிவுகளிலும் 3 சதவீதமும் முன்னுரிமை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 1800-599-6060 என்ற கட்டணமில்லாத் தொலைபேசி எண்ணையோ அல்லது 95662 89561 என்ற வாட்ஸ்அப் எண்ணையோ தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *