சென்னை, செப்.15- மதுரையில் நீதி கேட்டுப் போராடிய குடும்பத்தினரை தவெக ஆட்சி ஒடுக்குவதாக திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி திங்கள் கிழமை நேற்று (14.9.2026) தெரிவித்தார்.
மதுரை ஆனையூரைச் சேர்ந்த மாணவர் தமிழ்ச்செல்வன் 6.9.2026 அன்று வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்ப வில்லை. இந்த நிலையில், கூடல்புதூர் பகுதியில் உள்ள ஒரு கண்மாயில் அவர் இறந்து கிடந்தது அடுத்த நாள் தெரியவந்தையடுத்து, சடலம் மீட்கப்பட்டது.
இதுதொடர்பாக கூடல்புதூர் காவல் துறையினர் மர்ம மரணம் என வழக்குப் பதிவு செய்தனர்.
இந்நிலையில், தனது மகனின் இறப்புக்கு நீதி கேட்டுப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவரின் குடும்பத்தினரையும் உறவினர்களையும் காவல்துறையைக் கொண்டு தவெக அரசு ஒடுக்குவதாகக் குற்றம் சாட்டி கனிமொழி கண்டனம் தெரிவித் துள்ளார்.
குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தயங்கிவிட்டு, பாதிக்கப்பட்ட குடும்பத் தினரையே ஒடுக்கும் கேடுகெட்ட ஆட்சியாக இந்த தவெக ஆட்சி உள்ளது என்று அவர் தனது கண்டனப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
