தன் மீதான த.வெ.க.வின் இணையத் தாக்குதலுக்கு முதலமைச்சர் நடவடிக்கை என்ன? : மேயர் பிரியா கேள்வி

- Advertisement -

சென்னை, நவ. 27- செயற்கை நுண்ணறிவு மூலம் தன்னைத் தவறாகச் சித்திரித்து இணையத்தில் பரப்பும் தவெகவினர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கவி ருப்பதாக சென்னை மேயர் பிரியா கூறியுள்ளார்.

இதுகுறித்து சென்னை மேயர் பிரியா தெரிவித்திருப்பதாவது, “ஒரு காணொலியில் ஏஅய் மூலம் என்னை வக்கிரமாகச் சித்திரித்து தவெகவினர் பரப்பிக் கொண்டிருக்கின்றனர். இது முதன்முறை அல்ல. தொடர்ச்சியாக பலமுறை என்னைக் குறித்து இது போன்ற இணையத் தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாட்டுப் பெண்களுக்கெல்லாம் ‘தானே’ பாதுகாப்பு என்று வசனம் பேசிவரும் முதலமைச்சர் ஜோசப் விஜய் இது குறித்து(ம்) வாயே திறப்பதில்லை.

அரசியல், பதவி என்பதையெல் லாம் தாண்டி ஒரு பெண் ணாக, ஒரு தாயாக, ஒரு குடும்பத்தின் மகளாக இது போன்ற கேவலமான தாக்குதல்கள் தனிப்பட்ட முறையில் எனக்கு மிகுந்த வேத னையையும், மன உளைச் சலையும் உண்டாக் குகின்றன. இந்த தனிநபர் மீதான தாக்குதலைச் செய்வது தவெக தலைமையின் நேரடித் தொடர்பில் இருக்கும் ஒரு கும்பல், இவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *