கோயில் இணை ஆணையர்கள் ஆறு பேர் பணியிட மாற்றம்: அறநிலையத்துறை ஆணை

- Advertisement -

சென்னை, அக். 31- திருவேற்காடு தேவி கருமாரி அம்மன் கோயில் இணை ஆணையராக பணியாற்றி வந்த க.ராமு, இந்து சமய அறநிலையத் துறை சென்னை-1 இணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக அப்பதவிக்கு நியமிக்கப்பட்டிருந்த பா.விஜயாவின் நியமனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மதுரை மண்டலத்துக்கு பணியிட நியமனம் வழங்கப்பட்டிருந்த கி.ரேணுகாதேவி-யின் அந்த நியமனம் ரத்து செய்யப்பட்டு, அவர் திருவேற்காடு தேவி கருமாரி அம்மன் கோயில் இணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். காஞ்சிபுரத்துக்கு பணிநியமனம் வழங்கப்பட்டிருந்த தி.அனிதா-வின் அந்த உத்தரவு ரத்து செய்யப்பட்டு, அவர் சென்னை மண்டலம்-3 இணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.
சென்னை மண்டலம்-3 இணை ஆணையராக முன்னர் நியமிக்கப்பட்டிருந்த க.ரமணியின் நியமனம் ரத்து செய்யப்பட்டு, அவர் இந்து சமய அறநிலையத் துறை தலை மையிடத்தின் சரிபார்ப்புப் பிரிவு இணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை-1 நியமனம் ரத்து செய்யப்பட்ட பா.விஜயா, திரு வண்ணாமலை மண்டல இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையராகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தலைமையிட சரிபார்ப்புப் பிரிவு இணை ஆணையராக முன்னர் நியமிக்கப்பட்டிருந்த சி.குமரதுரை-யின் அந்த நியமனம் ரத்து செய்யப்பட்டு, அவர் காஞ்சிபுரம் மண்டல இணை ஆணையராக நிய மிக்கப்பட்டுள்ளார்.
பணியிட மாறுதல் பெற்றுள்ள அதிகாரிகள் அனைவரும் உடனடியாக தங்களுக்கு ஒதுக்கப்பட்ட புதிய பொறுப்புகளில் இணைந்து பணியாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *