லாரி ஓட்டுநர் காவல் நிலைய உயிரிழப்பு வழக்கில் சிபிசிஅய்டி விசாரணை அறிக்கைகளை தாக்கல் செய்ய ேவண்டும் : உயர் நீதிமன்றம் உத்தரவு

- Advertisement -

மதுரை, நவ. 27- செக்கானூரணி காவல் நிலையத்தில் விசாரணைக்குச் சென்ற லாரி ஓட்டுநர் உயிரிழந்த வழக்கில் நீதித் துறை நடுவர் மற்றும் சிபிசிஅய்டி விசாரணை அறிக் கைகளையும், காவல் நிலைய சி.சி.டி.வி. பதிவுகளையும் தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மதுரை ஒத்தக்கடையைச் சேர்ந்த தீரன் திருமுருகன் என்பவர், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: தேனியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் பாலகிருஷ்ணன், லாரியில் தீ விபத்து ஏற்பட்டு ஏலக்காய் மூட்டைகள் சேதமானது தொடர்பான புகாரின் பேரில் செக்கானூரணி காவல் நிலையத்துக்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். பின்னர் காவல் நிலைய கழிவறையில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

ஆனால், உடற்கூராய்வில் பால கிருஷ்ணன் உடலில் பல்வேறு இடங்களில் காயங்கள் இருந்துள்ளது தெரியவந்தது. எனவே, பால கிருஷ்ணன் மரணம் தொடர்பான வழக்கை சிபிஅய் விசாரணைக்கு மாற்றவும், அவரது குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் பி.வேல் முருகன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் ஆஜரான கிளீட்டஸ், “லாரியில் தீப்பற்றிய தகவலை தெரிவிக்க வாலாந்தூர் காவல் நிலையம் சென்றவரை காவல்துறையினர் செக்கானூரணி காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று இரவு முழுவதும் சட்ட விரோத காவலில் வைத்து துன் புறுத்தியுள்ளனர். மறுநாள் காலையில் கழிவறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாக குடும்பத்தினருக்கு காவல்துறையினர் தகவல் அளித்துள்ளனர். வழக்கை சிபிஅய் விசாரணைக்கு மாற்ற வேண்டும்” என வாதிட்டார்.

பாலகிருஷ்ணன் மனைவி தரப்பில் வழக்குரைஞர் ஹென்றிடிபேன் வாதிடும்போது, “காவல் நிலையத் தில் உயிரிழந்த ஓட்டுநரை வாலாந்தூர், செக்கானூரணி, உசிலம்பட்டி நகர், உசிலம்பட்டி தாலுகா காவல் நிலையங்களுக்கு அலையவிட்டுள்ளனர். இந்த காவல் நிலையங்களில்  காட்சிகளைப் பார்வையிட தனி நீதிபதி அனுமதி வழங்கினார். அந்த கண்காணிப்புப் படக் கருவிக் காட்சிகள் சத்தமின்றி எங்களுக்கு காண்பிக்கப்பட்டன” என்றார்.

அரசு தரப்பில், “ஓட்டுநர் பால கிருஷ்ணன் காவல்நிலைய கழிப் பறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள் ளார். இது தொடர்பாக 3 காவலர்கள் பணி யிடை நீக்கம் செய்யப்பட்டுள் ளனர். உடற்கூராய்வு தொடர்பாக மருத்துவர்களின் இறுதிக் கருத்து இன்னும் வரவில்லை. சிபிசிஅய்டி காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்” என கூறப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள், “இந்த வழக்கில் சிபிசிஅய்டி மாவட்ட கண்காணிப்பாளர், துணை கண்காணிப்பாளர் ஆகியோர் எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்படுகின்றனர். வழக்கு தொடர்பான பேரையூர் நீதித் துறை நடுவரின் விசாரணை அறிக்கை, காவல் நிலையங்களின் கண்காணிப்புப் படக் கருவிகள் பதிவுகள், சிபிசிஅய்டி விசாரணை யின் தற்போதைய நிலை குறித்த அறிக்கை, இறுதி மருத்துவ அறிக்கை ஆகியவற்றை டிச. 7-ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்தனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *