தென்காசி, ஜூன் 9 கள் விற்பனைக்கு அரசு ஏன் அனுமதி வழங்கக்கூடாது? என உயர்நீதிமன்ற மதுரை அமர்வு கேள்வி எழுப்பியுள்ளது.
தென்காசியில் பனைத் தொழிலாளி மீது துப்பாக்கிச்சூடு நடத்திய வழக்கை சிபிஅய் அல்லது வேறு விசாரணை அமைப்பிற்கு மாற்றக்கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் இன்று 8.6.2026 விசாரணைக்கு வந்தது.
அப்போது, தமிழ்நாட்டில் கள் விற்பனைக்கு அரசு ஏன் அனுமதி வழங்கக்கூடாது? அரசு செயல் திட்டம் வகுத்து, கள் விற்பனைக்கு அனுமதிக்கலாமே? அரசுக்கு வருவாயும் கிடைக்கும் என நீதிபதி புகழேந்தி கருத்து தெரி வித்தார்.
அத்துடன் கள்ளின் மருத்துவ பயன் என்ன என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தது.
