கீழ்நந்தியம்பாடி அருகே 3,000 ஆண்டுகளுக்கு முந்தைய கல்வட்டங்கள் கண்டெடுப்பு!

- Advertisement -

திருவண்ணாமலை, நவ.25– வந்தவாசியை அடுத்த கீழ்நந்தியம் பாடி கிராமம் அருகே சுமார் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய 50-க்கும் மேற்பட்ட கல்வட்டங்கள் இருப்பது தெரியவந்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டம், கீழ்நந்தியம்பாடி அருகே கல்வட்டங்கள் இருப்பதாக ஆசிரியா் பி.முருகேசன் அளித்த தகவலின் பேரில், வரலாற்று ஆய்வாளா் எறும்பூா் கை.செல்வ குமார் மற்றும் குழுவினா் அந்தப் பகுதிக்குச் சென்று ஆய்வு செய்தனா். பின்னா் இதுகுறித்து எறும்பூா் கை.செல்வகுமார் தெரிவித்ததாவது:

வந்தவாசியில் இருந்து சுமார் 12 கி.மீ. தொலைவில் உள்ள கீழ்நந்தியம்பாடி அருகே மேல்பாதி சாலையின் இரு புறமும் உள்ள காட்டுப் பகுதி களை ஆய்வு மேற்கொண்ட போது 50-க்கும் மேற்பட்ட கல்வட்டங்கள், கல்சுற்றுகள் இருப்பது தெரியவந்தது. பெரிய கற்கள் வட்ட வடிவ அமைப்பில் செங்குத்தாக நிறுத்தப்பட்டு நடுப்பகுதி காலியாக உள்ளது. ஒரு வட்டச் சுற்றில் 7 முதல் 9 கற்கள் வரை நிறுத்தப்பட்டுள்ளன. சில கல்வட்டங்களின் கற்கள் ஆங்காங்கே சிதறியும் காணப்படுகின்றன. வட்டச் சுற்றளவு சுமார் 150 செ.மீ வரை உள்ளது.

சில இடங்களில் சிறிய வடி விலான செங்கல் போன்ற அமைப்பு கொண்ட கற்கள், கருங்கற்கள் கொண்ட கற்குவியல் வட்ட வடிவில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இந்த வகையான ஈமச் சின்னங்கள் சுமார் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பெரும் கற்காலத்தை சோ்ந்தவையாக கருதலாம். மேலும், பழங்கால வாழிடங்கள், நீா்நிலைகளின் தடயங் களும் காணப்படுகின்றன.

எனவே, தொல்லியியல் சிறப்பு வாய்ந்த இந்த கீழ்நந்தியம்பாடி கல்வட்டங்களை தொல்லியியல் துறையினா் முறையாக அகழாய்வு செய்தால் பண்டைய தமிழரின் பண்பாட்டை உலகமறியச் செய்யலாம் என்றார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *