ஹிஜாப்’ அணியாமல் பாடல் பாடியதற்காக இசைக்குழுவிற்கு 74 கசையடி தண்டனையா?

- Advertisement -

டெக்ரான் நவ. 25- ஈரானிய பாடகிக்கும், அவரது இசைக் குழுவைச் சேர்ந்த 4 பேருக்கும், தலா 74 கசையடிகள் வழங்கப்பட்டதாக ஈரானின் அரசு இணையதள செய்திக் குறிப்பு தெரிவிக்கின்றது. இந்தச் செய்தி உலகளவில் பல்வேறு கண்டனங்களை ஈர்த்துள்ளது.

இந்நிலையில், ஆபாசமான, ஒழுங்கீனத்தைத் தூண்டும் கருத்துகளைக் கொண்ட காட்சிப்பதிவை உருவாக்கி இணையத்தில் வெளியிட்ட காரணத்துக்காகவே ஈரானிய பாடகி பாரஸ்டூ அஹ்மதிக்கும் அவரது இசைக் குழுவினருக்கும் கசையடி தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது என்று ஈரான் அரசு இணையதளத்தின் வழக்குறிஞர் தெரிவித்திருக்கிறார்.

பாரஸ்டூ அஹ்மதி 1997இல் வடக்கு ஈரானின் நவ்சஹார் பகுதியில் பிறந்தவர். டெஹ்ரானின் சூர் பல்கலைக்கழகத்தில் திரைப்பட இயக்கம் பாடப் பிரிவில் பட்டம் பெற்றவர். 29 வயதான பாரஸ்டூ பியானோ இசைக் கலைஞரும் கூட. மக்கள் குரலாக ஒலிக்கும் பாடல்களைப் பாட விருப்பமுடையவர்.

இந்நிலையில், டெஹ்ரானுக்கு தெற்கே உள்ள கோம் நகரில், ஆண் இசைக்கலைஞர்களுடன் சேர்ந்து ஹிஜாப் இல்லாமல் அஹ்மதி பாடுவது போன்ற காணொளி ஒன்று 2024 டிசம்பரில் யூடியூப்பில் வெளியானது. அந்த காட்சிப் பதிவு அரசுத் தரப்பு கோபத்தை ஈர்த்தது. அதனைத் தொடர்ந்து அஹ்மதி மீது வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில்தான் இப்போது அஹ்மதிக்கும், மேலும் 4 பேருக்கும் தனித்தனியாக தலா 74 கசையடிகள் வழங்கப்படுள்ளன. கூடவே, அவர்கள் அவர்கள் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு எவ்வித இசை, கலை நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளக் கூடாது. பயணம் செய்யக்கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *