காரைக்குடி, நவ. 25 காரைக்குடி மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டம் 20.11.2026 அன்று காலை 10.30 மணியளவில் காரைக்குடி குறள் அரங்கில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் வைகறை தலைமை வகித்தார். மாவட்டக் காப்பாளர் சாமி திராவிடமணி, மாவட்டச் செயலாளர் சி.செல்வமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டத் துணைத் தலைவர் கவிக்கோ கொ. மணிவண்ணன் கடவுள் மறுப்புக் கூறி வரவேற்புரையாற்றினார்.
சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற கழக மாநில ஒருங்கிணைப்பாளர் ஒரத்தநாடு இரா. குணசேகரன் தமது கருத்துரையில், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் உடல்நலம் குறித்தும், ஆசிரியர் அவர்களின் 94ஆம் ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு, அய்யாவின் சுவாச மாம் ‘விடுதலை’ நாளிதழுக்குச் சந்தாக்களை வழங்குவதோடு, தெருமுனைப் பிரச்சாரக் கூட்டங்க ளையும் நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
மேலும், கோவையில் பெரியார் அறிவுலகம் கண்ட திராவிட நாயகர் தமிழ்நாடு முதலமைச்சர்
மு.க.ஸ்டாலின் அவர்களின் அளப்பரிய சாதனைகளை வியந்து பாராட்டிய ஆசிரியர் அவர்க ளின் எண்ண ஓட்டத்தையும் எடுத்து ரைத்தார்.
தொடர்ந்து கழகத் தோழர்கள் விடுதலை சந்தாக்கள் வழங்குவது, தெருமுனைக் கூட்டங்கள் நடத்து வது, ஆசிரியர் அவர்களின் பிறந்தநாள் விழாவைச் சிறப்பாகக் கொண்டாடுவது குறித்து தங்களது கருத்துகளைத் தெரிவித்தனர்.
கூட்டத்தில் மாநில திராவிட மாணவர் கழக இணைச் செயலா ளர் மு.இளமாறன், கழகச் சொற்பொழி வாளர் தி.என்னாரெசு பிராட்லா, காரைக்குடி மாநகரத் துணைத் தலைவர் பழனிவேல் ராஜன், தேவகோட்டை ஒன்றியச் செயலாளர் ஜோசப், மாநில மகளிரணி அமைப்பா ளர் பாக்கியலட்சுமி, ஆ. பால்கி, சோ. முருகேசன் ஆகியோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
வீரவணக்கத் தீர்மானம்: சுய மரியாதைச் சுடரொளி பொத்தனூர் க.சண்முகம் அவர்களின் மறை விற்கும், காரைக்குடி மாவட்டக் கழகத் தோழர்கள் கோட்டையூர் வேலங்குடி கார்மேகம், இளங்குடி ம.காந்தி, தேவகோட்டை திரு மண வயல் பன்னீர்செல்வம் ஆகியோரின் மறைவிற்கும் வீர வணக்கம் செலுத்தித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
14.11.2016 அன்று தஞ்சாவூரில் நடைபெற்ற தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களைச் செயல்படுத்துவது எனத் தீர்மானிக்கப்பட்டது.
‘பெரியார் உலகமயமும், உலகம் பெரியார்மயமும்’ என்ற அரும்பெரும் பணியைச் சுமந்துகொண்டு ஓய்வின்றி உழைத்து வரும் வணக்கத்திற்குரிய தமிழர் தலைவர் மானமிகு ஆசிரியர் அவர்களின் பிறந்தநாளான டிசம்பர் 2ஆம் தேதி, கழகத் தோழர்கள் குடும்பத்துடன் சென்று வாழ்த்தி மகிழ்வது எனத் தீர்மானிக்கப்பட்டது.
ஆசிரியர் அய்யா அவர்களின் 94ஆம் ஆண்டு பிறந்தநாள் பரி சாக, காரைக்குடி மாவட்டக் கழ கத்தின் சார்பில் 94 ‘விடுதலை’ சந்தாக்களை வழங்குவது எனத் தீர்மானிக்கப்பட்டது.
