புதுடில்லி, நவ.23 வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகள் (எஸ்அய்ஆர்) குறித்து எழுந்து வரும் கவலைகளுக்குப் பதிலளிக்கும் வகையிலும், அப்பணிகளைக் கண்காணிக்கவும் ‘அரசியலமைப்புக் கான வழக்குரைஞர்கள் சங்கம்’ எனும் உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் அமைப் பால் ‘எஸ்அய்ஆர் சுதந்திர ஆணையம்’ அமைக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மதன் பி.லோகூர் இதன் தலைவராக உள்ளார். உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.கே.பட்நாயக், நீதிபதிகள் பதர் துரெஸ் அகமது, ரேகா சர்மா, அஞ்சனா பிரகாஷ் ஆகியோர் இந்த ஆணையத்தின் உறுப்பினர்களாக இடம்பெற்றுள்ளனர்.
கடிதம்
இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகளுக்குப் பிறகு சுமார் 1.27 கோடி இந்துக்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட் டுள்ளதாக அம்மாநில முதமைச்சர் ஆதித்யநாத் கூறியது எப்படி; இதற்கு ஆதாரமான தரவுகள் அல்லது ஆவணங்களை உடனடியாக அளிக்க வேண்டும் என்றும் ‘எஸ்அய்ஆர் சுதந்திர ஆணையம்’ கோரியுள்ளது.
இதுதொடர்பாக முதலமைச்சர் ஆதித்யநாத்திற்கு எழுதியுள்ள கடிதத்தில் இந்த ஆணையம் கூறியிருப்பதாவது:
‘‘உத்தரப்பிரதேசத்தில் 1.27 கோடி இந்துக்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட் டுள்ளதாக ஊடகங்களில் வெளியான பொது அறிக்கை, எங்கள் ஆணையத்தின் எஸ்அய்ஆர் முறைகேடு தொடர்பான ஆய்வு வரம்பிற்கு மிகவும் பொருத்தமானதாக உள்ளது. அதனால் இந்துக்கள் வாக்காளர் நீக்கங்களுக்கு ஆதாரப்பூர்வமான ஆவணங்கள் அல்லது உறுதியான தரவுகள் ஏதேனும் இருந்தால், அவற்றை வழங்குமாறு ஆணையம் தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறது. அந்த ஆவணங்களை முழுமையான சுயாட்சியுடனும், நடுநிலைமையுடனும் நாங்கள் ஆய்வு செய்வோம். மேலும், உத்தரப்பிரதேசத்தில் விரைவில் தேர்தல்கள் வரவிருப்பதாலும், லட்சக்க ணக்கான வாக்காளர்களின் வாக்குரிமை மறுக்கப்பட வாய்ப்புள்ளதாலும், இந்த விவகாரத்தின் அவசரத் தன்மையைக் கருத்தில் கொண்டு பதிலளிப்பதில் தாமதம் செய்ய வேண்டாம்” என எஸ்அய்ஆர் சுதந்திர ஆணையம் வலி யுறுத்தியுள்ளது.
