நாட்டில் வேலைவாய்ப்பின்மை விகிதம் 5.1 சதவிகிதமாகக் குறைவு!

1 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

புதுடில்லி, ஆக. 18 கடந்த ஜூலை மாதத்தில் நாட்டில் வேலைவாய்ப் பின்மை விகிதம் 5.1 சதவிகிதமாக குறைந்துள்ளது.

ஜூன் மாதத் தில் இந்த விகிதம் 5.5 சதவிகிதமாக இருந்த நிலையில், தொழிலாளர் பங்கேற்பு அதிகரித்துள்ள தால் இம்மாதம் வேலை வாய்ப்பின்மை விகிதம் சற்று குறைந்துள்ளது.

தேசிய புள்ளியியல் ஆய்வகத்தின் கால முறையிலான தொழிலாளர் சக்தி கணக்கெடுப் பின்படி, தொழிலாளர் சக்தி பங்கேற்பு விகிதம் மொத்தமாக 55.4 சதவிகிதத்தில் இருந்து 54.4 சதவிகிதமாகக் குறைந்துள்ளது.

புள்ளி விவரங்களின்படி, வேலைவாய்ப்பின்மை குறைவுக்கு கிராமப்புறங்கள் முக்கிய காரணமாக அமைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் நகர்ப்புற வேலைவாய்ப்பின்மை விகிதம் 6.7 சதவிகிதமாக மாற்றம் காணாமல் உள்ளது.

ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில், ஒட்டு மொத்த மற்றும் கிராமப்புற வேலையின்மை விகிதங்கள் ஏறக்குறைய நிலையாகவே உள்ளன. அதேவேளையில், நகர்ப்புற வேலையின்மை விகிதம் ஜூலை 2025-இல் இருந்த 7.2 சதவீதத்திலிருந்து ஜூலை 2026-இல் 6.7 சதவீதமாக 0.5 சதவீதப் புள்ளிகள் குறைந்துள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *