மதுரை, நவ.22 மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் 20.11.2026 அன்று இடைக்கால உத்தரவைப் பிறப்பித்தது. இந்நிலையில், மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நேற்று (21.11.2026) மாவட்ட அளவிலான வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து அனைத்துத் துறை அதிகாரிகளுடனான ஆலோ சனைக் கூட்டம் நடைபெற்றது.
அதில் பங்கேற்க வந்த அமைச்சர் நிர்மல் குமார், ‘‘ஆலோ சனைக் கூட்டம் முடிந்த பிறகு, திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாகத் தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பாகச் செய்தியாளர் சந்திப்பு நடைபெறும்’’ என்று கூறினார்.
அதனால், அனைத்து செய்தி யாளர்களும் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைச்சரின் சந்திப்புக்காகத் திரண்டனர். ஆனால், திடீரென செய்தியாளர் சந்திப்பு ரத்து செய்யப்பட்டதாக அமைச்சர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் அரசின் நிலைப்பாடு குழப்பமாக இருப்பதால் செய்தியாளர்களைச் சந்திக்க அமைச்சர் நிர்மல் குமார் தயங்கியதாகவும், மேலிட ஆலோசனையின்படியே செய்தியாளர் சந்திப்பை ரத்து செய்ததாகவும் கூறப்படுகிறது.
எனினும், கூட்ட அரங் குக்கு வெளியே காத்திருந்த செய்தியா ளர்களைத் தவிர்ப்பதற்காக, வேறு வழியாக அமைச்சர் நிர்மல் குமார் வேகமாகச் சென்றார். ஆனாலும், அவரைப் பின்தொடர்ந்து சென்ற செய்தி யாளர்கள், திருப்பரங்குன்றம் வழக்கு தொடர்பாகப் பல்வேறு கேள்வி களை அடுத்தடுத்து எழுப்பினர்.
அதற்கு அமைச்சர் நிர்மல் குமார், ‘‘திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்றும் வழக்கில் சீராய்வு மனு தாக்கல் செய்வது குறித்து சட்ட வல்லு நர்களுடன் ஆலோசித்து வருகிறோம். இதுதொடர்பாக 22.11.2026 (இன்று) காலை தெரிவிப்போம்’’ என்று கூறி விட்டுச் சென்றார்.
திருப்பரங்குன்றம் கோயில் தீபத்தூணில் தீபம் ஏற்றலாம் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவையடுத்து, காவல் துணை ஆணையர் இனிகோ திவ்யன் தலைமையில் 700-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்புப் பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். திருப்பரங்குன்றம் மலைப்பகுதியில் அத்துமீறி யாரும் நுழைந்துவிடாமல் இருக்க காவல் துறையினர் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தி உள்ளனர். மேலும் மற்ற மத அமைப்புகளின் நடவடிக்கைகளும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
திருப்பரங்குன்றம் மலைக்கு செல்லும் பாதை உட்பட மலையைச் சுற்றிலும் காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். மலைப்பகுதி முழுவதையும் ட்ரோன் மூலம் கண்காணித்து வருகின்றனர். வெளியாட்கள் நடமாட்டத்தையும் காவல் துறையினர் கண்காணித்து வருகின்றனர். கோயில் மற்றும் மலைப் பகுதியில் இருந்து குறிப்பிட்ட தூரம் வரை ஆர்ப்பாட்டம், ஊர்வ லங்களுக்குத் தடை விதிக்கப் பட்டுள்ளது.
சீராய்வு மனு தாக்கல்
இந்தநிலையில் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது.
