‘‘உத்தரப்பிரதேச மாணவர்களுக்கு வழங்கும் டேப்லெட் ஹரப்பா காலத்தைச் சேர்ந்தது!’’

- Advertisement -

அகிலேஷ் கிண்டல்

லக்னோ, நவ.23- உத்தரபிரதேச முன்னாள் முதலமைச்சர், சமாஜ்வாடி நிறுவனருமான முலாயம் சிங் யாதவின் பிறந்த நாளையொட்டி லக்னோவில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் கட்சித் தலைவர் அகிலேஷ்  கலந்து கொண்டார்.

அப்போது முந்தைய சமாஜ்வாடி ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட் டங்களை அவர் நினைவு கூர்ந்தார். குறிப்பாக மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்பட்டதை அவர் சுட்டிக் காட்டினார். அதேநேரம் தற்போதைய அரசு மாணவர்களுக்கு வழங்கும் ‘டேப்லெட்’ ஹரப்பா நாகரிக காலத்தை சேர்ந்தது என கிண்டல் செய்தார்.

மாநிலத்தில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடக்கும் சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாடி வெற்றி பெற்று ஆட்சியமைத்தால், மருத்துவம், இலக் கியம், கலை, சினிமா, விளையாட்டு உள்ளிட்டதுறைகளில் சாதிப்போருக்கு வழங்கப்படும் யஷ் பாரதி விருது மீண்டும் வழங்கப்படும் எனவும், இதில் வழங் கப்படும் நிதி ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சமாக உயர்த்தப்படும் என்றும் உறுதியளித்தார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *