பழைய காசோலைப் புத்தகங்கள் செல்லாது என்ற தகவல் வதந்தி ரிசர்வ் வங்கி திட்டவட்டமான விளக்கம்!

- Advertisement -

மும்பை, நவ.9 2027ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் பழைய காசோலைப் புத்தகங்கள் செல்லாது என்றும், புதிய நவீன பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய காசோலைகள் அமல்படுத்தப் பட உள்ளதாகவும் சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல்கள் முற்றிலும் வதந்தி என்று இந்திய ரிசர்வ் வங்கி (RBI) தெளிவுபடுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களாக, தற்போது புழக்கத்தில் இருக்கும் காசோலைப் புத்தகங்கள் 2026ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதியுடன் முடிவுக்கு வருவதாகவும், மேம் படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சங் களுடன் கூடிய புதிய காசோலை் புத்தகங்கள் 2027 ஜனவரி 1 முதல் நடைமுறைக்கு வரவுள்ளதாகவும் தகவல்கள் பரவின.

இந்தத் தகவலால் பெரும் குழப்பமடைந்த வங்கி வாடிக்கை யாளர்கள் வங்கிகளுக்குப் படை யெடுக்கத் தொடங்கினர். மேலும், சமூக வலைதளங்களிலும் காசோலைகள் செல்லாது என்ற செய்தி வேகமாகப் பரவி வாடிக் கையாளர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியது.

மக்களிடையே நிலவிவரும் இந்தத் குழப்பங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் ரிசர்வ் வங்கி தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் (X) தளத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட் டுள்ளதாவது:

“தற்போது புழக்கத்தில் இருக்கும் காசோலை் புத்தகங்களில் எந்தவிதமான மாற்றத்தையும் ரிசர்வ் வங்கி கொண்டு வரவில்லை.” “சமூக வலைதளங்களில் பரவி வரும் செய்திகள் முற்றிலும் தவறானவை மற்றும் மக்களை திசை திருப்பக் கூடியவை.”

“இத்தகைய முக்கிய விவகாரங்கள் குறித்து ரிசர்வ் வங்கி அவ்வப்போது அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை வெளியிடும். எனவே, பொதுமக்கள் இது போன்ற வதந்திகளை நம்ப வேண்டாம்” என்று கேட்டுக் கொள்ளப் பட்டுள்ளது.

வங்கி வாடிக்கையாளர்கள் யாரும் இது போன்ற சமூக வலைதளப் பொய்ச் செய்தி களை நம்பி குழப்பமடைய வேண் டாம் என ரிசர்வ் வங்கி கேட்டுக் கொண்டுள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *