ஆளுநர் – முதலமைச்சர் இடையே ‘பனி’ப் போரால் புதுச்சேரி அரசு செயல்பட முடியாத நிலை!

- Advertisement -

புதுச்சேரி, நவ. 23- புதுச்சேரியில் முதலமைச்சர் – ஆளுநர் இடையே நீடிக்கும் ‘பனி’ப் போரால் அரசு இயந்திரம் இயங்க முடியாத நிலை உருவாகியுள்ளது.

புதுச்சேரியில் இரண்டாவது முறையாக தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது. இதில், என்.ஆர்.காங்., சார்பில் முதலமைச்சர் ரங்கசாமி, மல்லாடி கிருஷ்ணராவ், சிவக்கொழுந்து, ராஜவேலு மற்றும் பா.ஜ., சார்பில் நமச்சிவாயம், ராஜசேகர் ஆகியோர் அமைச்சர்களாக உள்ளனர். தற்காலிக சட்டமன்றத் தலைவராக அன்பழகன் உள்ளார்.

இந்நிலையில், இந்த ஆட்சி அமைந்ததி லிருந்து, ஆளுநர் கைலாஷ்நாதன் முதலமைச்சர் ரங்கசாமி இடையே அலுவல் ரீதியான மோதல்களால் புதுச்சேரியில் உள்ள பல துறைகளில், காலிப் பணியிடங்கள் அதிகரித்து சில துறைகளையே மூடும் அளவிற்கு பிரச்சினை அபாய நிலைக்குச் சென்றுள்ளது.

எடுத்துக்காட்டாக, புதுச்சேரி அரசு மருத்துவமனையில், பல ஆண்டுகளாக நிரந்தர மருத்துவர்கள் பணி நியமனங்கள் நடைபெறவில்லை. ஏற்கெனவே பணியில் இருந்த சிறந்த மருத்துவ நிபுணர்கள் பெரும்பாலானோர் ஓய்வு பெற்று விட்டனர். இது மட்டுமின்றி, ஆண்டிற்கு 1,500 மருத்துவர்களை உருவாக்கும் புதுச்சேரியில் உள்ள அரசு மருத்துவமனையில் இருதய அறுவை சிகிச்சைக்கு இதுவரை மருத்துவர்களை நியமிக்காமல், சென்னை தனியார் மருத்துவமனை மருத்துவர்களை கொண்டே அறுவை சிகிச்சைகள் நடந்து வரும் நிலை இன்று வரை தொடர்கிறது.

குருமாம்பட்டு காமராஜர் அறிவியல் வேளாண் அறிவியல் நிலையத்தில் போதுமான ஊழியர்கள் இல்லாததால், ஆராய்ச்சிக்காக உற்பத்தி செய்ய வேண்டிய நெல் ரகங்களே பயிரிட முடியாத நிலை; ரோமன் ரோலண்ட் நூலகத்தில் மதிப்பாகப் பாதுகாக்க வேண்டிய நுால்களை பைண்டிங் செய்வதற்கு ஊழியர் இல்லை. அரசு கல்லுாரிகள், மேல்நிலைப் பள்ளிகளில் போதிய விரிவுரையாளர்கள் இல்லை என இப்படி எந்த துறையில் எடுத்தாலும் ஊழியர்கள் இல்லை என்ற தகவலே தலை விரித்தாடுவதால், அனைத்து துறைகளுமே கடும் நெருக்கடியை சந்தித்துள்ளது.

இதில், விரைவில் மூடும் நிலைக்கு சுண்ணாம்பாறு படகு குழாம் வந்து விட்டது. புதுச்சேரியின் அரசு துறைகளின் நிலை இப்படி இருக்க, இதற்கு காரணமாக முதலமைச்சர் தரப்பில் கூறப்படுவது, புதுச்சேரியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் சார்பில் கொடுக்கப்படும் அரசு உத்தரவுகள் எதையுமே, ஆளுநரின் கட்டுப்பாட்டில் செயல்படும் அரசு செயலர்கள் ஏதாவது ஒரு காரணத்தை கூறி செயல்படுத்தாமல் தடுத்து நிறுத்துகின்றனர்.

இதனால், பல துறைகளில், காலிப் பணியிடங்கள் நிரப்புவதில் சிக்கல், புதிய தொழிற்சாலைகள் கொண்டு வருவதில் தடங்கள், மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்ற முடியாமல் தடுப்பு, அரசு ஊழியர்கள் பணி நியமனம் பதவி உயர்வு, கார்ப்பரேஷன் ஊழியர்களுக்கான அடிப்படை ஊதியம் உள்ளிட்டவைக்கூட எதுவுமே செய்ய முடிவதில்லை.

காலி பணியிடங்களில் ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்களை நியமிக்க கூறுவது, சில நாட்களில் அவர்களை நீக்க கூறுவது என அரசு செயலர்கள் இப்படி தாறுமாறாக செயல்படுகின்றனர். சில செயலர்கள் முதலமைச்சரை வந்து சந்திப்பது கூட இல்லை என, கூறுகின்றனர்.

செயலர்கள் தரப்பில் கூறப்படுவது, ஒன்றிய அரசின் திட்ட வழிமுறைகளைக் கொண்டே உத்தரவுகள் செயல்படுத்தப் படுகிறது. நீதிமன்ற உத்தரவு காரணமாக கொல்லைப்புற நியமனங்கள் நியமிக்க முடியாது. இதனால் அனைத்து கோப்புகளுக்கும் அனுமதி வழங்குவதில் சட்ட விதிமுறைகள் அனுமதிப்பதில்லை என்கின்றனர். இப்படி ஆளுநர் – முதலமைச்சர் இடையே ஏற்பட்டுள்ள பனி போரால், மாநிலத்தில் படித்த இளைஞர்களின் அரசு பணி கனவு நொறுங்கியுள்ளது.

இப்பிரச்சினைகளுக்கு முக்கிய காரணம், கூட்டணியில் உள்ள பா.ஜ.,விற்கு சட்டமன்றத் தலைவர் பதவி தராதது, சென்னைக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடி, அமித்ஷா ஆகியோரை சந்திக்காமல் அலட்சியம் காட்டுவது என முதலமைச்சர் ரங்கசாமி இருப்பதால் தான், ஆட்சியில் போதிய ஒத்துழைப்பு இல்லாமல் ஆளுநர், முதலமைச்சருடன் உரசலில் உள்ளதாக பா.ஜ., தரப்பில் கூறப்படுகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *