பிஎஃப் திட்டத்தில் கட்டாயம் சேர்வதற்கான மாத ஊதிய வரம்பு ரூ.25,000 ஆக உயர்வு!

இணையவழி கையெழுத்து இயக்கம்

புதுடில்லி, செப். 17- பிஎப் பிடித்தத்தின் கீழ் கட்டாய வரம் பில் வருவதற்கான மாத ஊதிய வரம்பை ரூ.15 ஆயிரத்தில் இருந்து ரூ.25 ஆயிரமாக உயர்த்த ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (இபிஎப்ஓ) ஊதிய வரம்பு கடந்த 2010 முதல் 2014 வரை மாற்றமின்றி இருந்தது. செப்டம்பர் 2014இல் அது ரூ.15,000 ஆக உயர்த்தப்பட்டது. முதல் முறையாக வேலைக்கு சேர்பவரின் அடிப்படை ஊதியம் ரூ.15 ஆயிரத்திற்கு கீழ் இருந்தால் கட்டாயம் பிஎப் திட்டத்தில் சேர வேண்டும். ரூ.15 ஆயிரத்திற்கு அதிகமாக இருந்தால் சம்பந்தப்பட்ட ஊழியரின் விருப்பப்படி பிஎப் திட்டத்தில் சேராமலும் இருக்கலாம்.
இந்நிலையில், 12 ஆண்டுகளுக் குப் பிறகு தற்போது மீண்டும் பிஎப் ஊதிய வரம்பு உயர்த்தப் பட்டுள்ளது. இது ரூ.15 ஆயிரத்தில் இருந்து ரூ.25 ஆயிரமாக உயர்த்த ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்தள்ளதாகவும், இதன் மூலம் 51 லட்சத்திற்கு மேற்பட்ட கூடுதல் ஊழியர்கள் கட்டாய பிஎப் வரம்புக்குள் கொண்டு வரப்படுவார்கள் என்றும் ஒன்றிய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறி உள்ளார்.
இந்த திருத்தப்பட்ட வரம்பு (17.9.2026) இன்று முதல் அமலுக்கு வருவதாக ஒன்றிய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச் சகம் அறிவித்துள்ளது. ஒன்றிய தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா எக்ஸ் பதி வில், ‘‘அமைச்சரவையின் முடிவு நாட்டின் தொழிலாளர்களுக்கு பரந்த சமூக பாதுகாப்பை வழங்கு வதோடு, வேலைவாய்ப்பை முறை சார்ந்ததாக மாற்றுவதையும் துரிதப் படுத்தும்’’ என கூறி உள்ளார்.
இந்த நடவடிக்கையால் இனி ரூ.25,000 வரை ஊதியம் வாங்கும் ஊழியர்களுக்கும் பிஎப், ஓய்வூதியம் மற்றும் காப்பீட்டு பலன்கள் கட்டாயமாக கிடைக்கும். ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டத்திற்கு கணக்கிடப்படும் உச்சவரம்பும் ரூ.25,000 ஆக உயர்வதால், மாதாந்திர ஓய்வூதியத் தொகை சுமார் 66.7% வரை அதிகரிக்கும். இந்த முடிவால் அரசுக்கு ஆண்டிற்குச் சுமார் ரூ.11,339 கோடி செலவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது அளிக்கப்படும் நிதியுதவி ரூ.10,250 கோடி. அடுத்த 5 ஆண்டுகளில் இதற்கான மொத்தச் செலவு சுமார் ரூ.56,696 கோடி என மதிப்பிடப் பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *