திருப்பூரில் நிலத்தடி நீர் மாசு காரணமாக தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்கு! 

- Advertisement -

திருப்பூர், நவ.22 திருப்பூர் மாவட்டத்தில் உள்ள முதலிபாளையம் மற்றும் நல்லூர் பகுதிகளில் கைவிடப்பட்ட கல் குவாரிகளில் தொழிற்சாலைக் கழிவுகள் கொட்டப்பட்டதால் நிலத்தடி நீர் மாசுபாடு ஏற்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக வெளியான செய்திகளை அடிப்படையாக கொண்டு டில்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் முதன்மை அமர்வு  இந்த வழக்கில் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், ஒன்றிய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகம், மத்திய நிலத்தடி நீர் வாரியம், சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் ஆகியோரை வழக்கில் இணைத்து உத்தரவிட்டது.

மேலும், சந்தேகிக்கப்படும் மாசடைந்த இடத்தைப் குறித்து விரிவான விசாரணையை மேற்கொள்ள ஏதுவாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் , அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் பிற நிபுணர்களின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய ஒரு பல்துறை தொழில்நுட்பக் குழுவை அமைக்க வேண்டும். மேலும். இந்த ஆய்வு என்பது நிலத்தடி நீர் மாசுபாட்டின் அளவு, எவ்வாறு மாசு அடைகிறது என்பதை கண்டறிவதோடு ,அதனை தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்தும், நிலத்தடி நீரின் தரத்தை மேம்படுத்துவதற்கான குறுகிய கால மற்றும் நீண்ட கால உத்திகள், சுற்றுச்சூழல் பாதுகாப்புகளை வலுப் படுத்தவும், நீர் மாசு அடைவதை தடுக்கவும் எடுக்கப் பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விவரிவான அறிக்கையை சமர்பிக்க வேண்டும் என உத்தரவிட்டது.

இதையடுத்து இந்த வழக்கின் விசாரணையை சென்னை தென் மண்டல பசுமை தீர்ப்பாய அமர்வுக்கு மாற்றி, விசாரணையை வரும் 2027 ஜனவரி 22ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *