பில்கேட்சுக்கு உ.பி. முதலமைச்சர் சாமியார் யோகி ஆதித்யநாத் புத்தர் சிலையை கொடுப்பானேன்?

- Advertisement -

அண்மையில் இந்தியா வந்த பில்கேட்சு உத்தரப் பிரதேசத்தில் தலைநகர் லக்னோவில் உள்ள சேவை அமைப்பு ஒன்றிற்குச் சென்றார்.

அதன் பிறகு மரியாதை நிமித்தமாக அம்மாநில முதலமைச்சர் சாமியார் ஆதித்யநாத்தை சந்தித்தார்.

தன்னைச் சந்திக்க வந்த மைக்ரோசாப்ட் நிறுவனரும், தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பின் தலைவருமான பில்கேட்சுக்கு வெள்ளியால் செய்யப்பட்ட திெபத்திய கலை வடிவத்தில் உருவான புத்தர் சிலை ஒன்றைத் தந்தார்.

சாமியார் ஆதித்யநாத் கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடந்த மகாமகம் தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் பேசும் போது உலகம் முழுவதும் ஹிந்து மதம் குறித்து பேச வேண்டும்.

நமது ஸநாதன வழிபாட்டுமுறைகளையும், நமது வழிபாட்டு தெய்வங்களையும் உலகின் ஒவ்வோரு மூலைக்கும் கொண்டு சென்று ஸநாதனத்தின் பெருமையைப் பரப்பவேண்டும்.

நாம் ராமன், அனுமான், சீதை, லட்சுமணன் சிலைகளைப் பரிசாகக் கொடுக்க வேண்டும் என்று கூறினார்.

ஆனால் அவரே தன்னைக் காணவந்த பில்கேட் சுக்கு புத்தர் சிலையைப் பரிசாக இப்பொழுது தந்துள்ளார். ராமன் சிலையை அல்லது ராமன் கோயில் உருவத்தையோ பரிசாக ஏன் கொடுக்கவில்லை?

பில்கேட்சைப் பொறுத்த வரையில், சிறந்த பகுத்தறிவுவாதி – பகுத்தறியும் அறிவியல் மனப்பான்மையும் கொண்டவர்.

‘எந்தவொரு பிரச்சினையையும் மத நம்பிக்கைகள் அல்லது மூடநம்பிக்கைகளின் அடிப்படையில் அணுகாமல் தரவுகள், சான்றுகள் மற்றும் தர்க்கத்தின் அடிப்படையிலேயே அணுகுபவர் – ‘அணுக வேண்டும்’ என்றும் கூறுபவர்.

மதச் சடங்குகளில் நம்பிக்கையின்மை கொண்டவர். வாரந்தோறும் தேவாலயம் செல்வது போன்ற மதச் சடங்குகள் நேரத்தை வீணடிக்கும் செயல் என்பது அவர்தம் கருத்து.

‘‘எனக்கு ஆறு வேலைகளைச் செய்ய வேண்டியிருக்கும்போது, ஞாயிற்றுக்கிழமை காலை நேரத்தைத் தேவாலயத்தில் செலவிடுவது அறிவார்ந்த செயலாகத் தெரியவில்லை’’ என்று வெளிப்படையாகக் கருத்துத் தெரிவித்துள்ளவர்.

அவரது ‘கேட்ஸ்’ அறக்கட்டளை (Gates Foundation) மூலம் ஆப்பிரிக்கா மற்றும் ஆசிய நாடுகளில் போலியோ,  மலேரியா, எச்.அய்.வி. போன்ற நோய்களை குணப்படுத்தப் பயன்படும் தடுப்பூசிகளுக்கு எதிராகப் பரப்பப்படும் மத மற்றும் சமூக மூட நம்பிக்கைகளை முறியடித்து அறிவியல் விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் முக்கியப் பங்காற்றி வருகிறவர்.

அத்தகையவருக்குப் புத்தர் சிலையைக் கொடுப்பது சரியே! அதே நேரத்தில் புத்தர் வருணாசிரமத்தை எதிர்க்கக் கூடியவர் – யாகங்களைத் தடுத்தவர் என்பதை உ.பி. முதலமைச்சர் ஆதித்யநாத் அறிவாரா?

புத்தரையும், மகாவிஷ்ணுவின் அவதாரமாக்கிய ஸநாதன கூட்டத்தைச் சேர்ந்தவர்தானே அவர்!

‘எந்த நேரத்தில் எந்த வேடம் போடலாம்’ என்பதை நன்கறிந்த நால் வருணக் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் – ‘இவர்கள் சந்தர்ப்பவாதிகள்’ என்பதன் அடையாளம்தான் பில்கேட்சுக்கு உ.பி. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்  புத்தர் சிலையைப் பரிசாகக் கொடுத்ததாகும். ராமன், சீதை, அனுமன் சிலைகளைத்தான் பரிசாகக் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்திச் சொன்னவர், இப்பொழுது புத்தர் சிலையை கொடுப்பானேன்? புரிந்து கொள்வீர்!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *