கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 21.11.2026

- Advertisement -

டெக்கான் கிரானிக்கள், அய்தராபாத்:

* தமிழ்நாட்டில் அமைதியைக் குலைக்க பாஜக, ஆர்.எஸ்.எஸ். முயற்சி: திமுக குற்றச்சாட்டு! திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் விவகாரத்தில் உச்சநீதிமன்ற இடைக்கால உத்தரவை பயன்படுத்தி, பாஜக, ஆர்.எஸ்.எஸ். மற்றும் இந்து முன்னணி தமிழ்நாட்டில் மதரீதியான பதற்றத்தை உருவாக்க முயற்சிப்பதாக திமுக குற்றம்சாட்டியுள்ளது. 150 ஆண்டு கால கார்த்திகை தீப மரபைச் சீர்குலைக்க முயற்சிப்பதாகவும், தமிழ்நாட்டின் அமைதியை மக்கள் பாதுகாக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

* எதிரான வழக்கு: உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு விசாரிக்கிறது! தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பான 2023 சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட மனுவை, அய்ந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றுவது குறித்து உச்ச நீதிமன்றம் பரிசீலனை.

* ஜந்தர் மந்தர் போராட்ட இடமாற்றம்: பதிலளிக்க ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் ஒரு வாரம் அவகாசம்! ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த அனுமதிக்கப்பட்ட இடத்தை மாற்றி, வேறு மூன்று இடங்களுக்கு ஒதுக்க டில்லி காவல்துறை எடுத்த முடிவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், ஒன்றிய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் ஒரு வாரம் அவகாசம் வழங்கியுள்ளது.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* இந்திய பெரு நிறுவனங்களின் மீதான மோடியின் ‘பசி’ விமர்சனம்: ராகுல் காந்தி பதிலடி! பெரு நிறுவனங்களுக்கு விமான நிலையங்கள், துறைமுகங்கள், சுரங்கங்கள் உள்ளிட்ட பொதுச் சொத்துகள் தாரைவார்க்கப்பட்டும் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை என ராகுல் காந்தி குற்றச்சாட்டு. பணமதிப்பிழப்பு, தவறான ஜிஎஸ்டி மூலம் சிறு வணிகர்களை அழித்து, பெருநிறுவன ஏகபோகத்தை மோடி அரசு வளர்த்ததாக சாடல்.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* மகாராஷ்டிரா ஷிண்டே அணி – பாஜக மோதல்: கூட்டுறவு வங்கித் தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க காங்கிரஸ், அஜித் பவார் அணியுடன் ஷிண்டே சிவசேனா கூட்டணி! மகாராஷ்டிராவில் சாங்லி, சதாரா மாவட்டக் கூட்டுறவு வங்கிகளின் தலைமைப் பொறுப்புகளை கைப்பற்ற, ஷிண்டே தலைமையிலான சிவசேனா எதிர்க்கட்சிகளுடன் கைகோத்துள்ளது. மகாயுதி கூட்டணிக்குள் பாஜக மற்றும் கூட்டணி கட்சிகளிடையே பிளவு அதிகரிப்பதை இது வெளிப்படுத்துகிறது.

தி இந்து:

* பன்னுனைக் கொலை செய்ய முயன்ற  நிகில் குப்தா என்ற இந்தியருக்கு 19 ஆண்டுகள் சிறை! அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு: நியூயார்க்கில் காலிஸ்தான் பிரிவினைவாதி குர்பத்வந்த் சிங் பன்னுனைக் கொலை செய்ய சதித்திட்டம் தீட்டிய வழக்கில், நிகில் குப்தா குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவருக்கு 19 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

டைம்ஸ் ஆப் இந்தியா:

* தொகுதி மறுவரையறை மசோதா: நாடாளு மன்றத்தில் மீண்டும் மோதலா? திமுக உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள் ஒன்றுபட்டுள்ளதாக காங்கிரஸ் அறிவிப்பு! தொகுதி மறுவரையறை நடவடிக்கை குறித்து எதிர்க்கட்சிகளுக்கு மத்திய அரசு உரிய தகவல்களைத் தெரிவிக்கவில்லை என காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. இப்பிரச்சினையில் திமுக, தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்) உள்ளிட்ட இந்தியா கூட்டணிக் கட்சிகள் ஒருமித்த நிலைப்பாட்டில் இருப்பதாக ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

* நெருங்கிய உறவினர்களுக்குள் திருமணம் தடுக்கச் சட்டம் இயற்றுக: ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்! மரபணுக் குறைபாடுகளால் பிறக்கும் குழந்தைகள் பாதிக்கப்படுவதைத் தடுக்க, நெருங்கிய உறவினர்களுக்கு இடையிலான திருமணங்களைத் தடுக்க சட்டம் இயற்றுவது குறித்து ஒன்றிய அரசு பரிசீலிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. பெங்களூரு வைச் சேர்ந்த 20 வயதுப் பெண்ணின் மருத்துவ பாதிப்புகள் தொடர்பான வழக்கு, பொது சிவில் சட்டம் (UCC) குறித்த விவாதத்தையும் மீண்டும் எழுப்பியுள்ளது.

– குடந்தை கருணா

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *