திருமலை, செப் 11- பிறந்து 13 நாட்களே ஆன பச்சிளம் குழந்தைக்கு கடவுச்சீட்டு பெறப்பட்டுள்ள தகவல் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றது. ஆந்திர மாநிலம் சிறீகாகுளம் மாவட்டம் இச்சாபுரம் நகரை சேர்ந்தவர் ஆஷிஷ். இவரது மனைவி கீதாமாதுரி. இவர்கள் வேலை காரணமாக லண்டனில் குடியேறினர். இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த கீதாமாதுரிக்கு கடந்த மே 30ஆம் தேதி லண்டனில் பெண் குழந்தை பிறந்தது.
குழந்தை பிறந்த மறுநாள் (ஜூன் 1ஆம் தேதி) குழந்தைக்கு அகஸ்யா பிரின்ஸ் என பெயர் சூட்டி பிறப்புச் சான்றிதழை பெற்றனர். பின்னர் 2ஆம் தேதி அக்குழந்தைக்கு ஆதார் அட்டைக்காக விண்ணப் பித்தனர். இதைதொடர்ந்து 4ஆம் தேதி குழந்தையின் ஆதார் அட்டைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதையடுத்து 6ஆம் தேதி அகஸ்யாபிரின்ஸ் பெயரில் பாஸ்போர்ட் பெறுவதற்காக விண்ணப்பிக்கப்பட்டது. இதைதொடர்ந்து 12ஆம் தேதி கடவுச்சீட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டது. வெறும் 13 நாட்களில் வெளிநாடு செல்வதற்கான கடவுச்சீட்டு ஒப்புதல் அளிக்கப் பட்டது ஒரு சாதனை என்று கூறப்படுகிறது. அகஸ்யாபிரின்ஸ், மிக இளம் வயதில் கடவுச்சீட்டு பெற்றவர் என பன்னாட்டு சாதனைப் புத்தகத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு உள்ளிட்ட
அய்ந்து மாநில தேர்தலின்போது
அய்ந்து மாநில தேர்தலின்போது
பா.ஜ.க. பெற்ற நன்கொடை ரூ.1,473 கோடி!
புதுடில்லி, செப். 11- தமிழ்நாடு, மேற்கு வங்கம், அசாம், புதுச்சேரி, கேரளா ஆகிய 5 மாநிலங்கள், யூனியன் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல்களின் போது பாஜகவின் மத்தியத் தலைமை அலுவலகத்துக்குக் கிடைத்த மொத்த நன்கொடை ரூ.1,472.8 கோடி என தேர்தல் ஆணையத்திடம் பாஜக தாக்கல் செய்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு, அசாம் மற்றும் புதுச்சேரி சட்டப் பேரவைத் தேர்தல்களுக்கான பாஜக செலவின அறிக்கையை தேர்தல் ஆணையம் தனது இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது. இதன்படி, தேர்தல் நடவடிக்கைகள் தொடங்கிய கடந்த மார்ச் 15, 2026 அன்று பாஜகவின் வங்கி இருப்புத் தொகை ரூ.6,722.6 கோடியாக இருந்தது. இந்நிலையில், தேர்தல் முடிவடைந்த மே 6, 2026-இல் அதன் வங்கி இருப்பு ரூ.7,627.2 கோடியாக உயர்ந்துள்ளது.
அசாமில் அதிகபட்ச செலவு: பாஜகவின் மத்தியத் தலைமை அலுவலகம், மாநில மற்றும் மாவட்ட அமைப்புகள் இணைந்து அசாம், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி தேர்தல்களில் மொத்தம் ரூ.160 கோடியைச் செலவிட்டுள்ளன. இதில் அதிகபட்சமாக அசாம் மாநிலத்தில் ரூ.96.3 கோடியும், தமிழ்நாட்டில் ரூ.51.6 கோடியும், புதுச்சேரியில் ரூ.11.9 கோடியும் செலவிடப்பட் டுள்ளது. இதில் கட்சிப் பிரச்சாரத்துக்காக ரூ.130.4 கோடியும், விளம்பரங்களுக்காக ரூ.29.6 கோடியும் செலவிடப்பட்டுள்ளது.
