தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 94ஆம் பிறந்த நாள் 94 விடுதலை சந்தாக்களை பரிசாக வழங்க முடிவு தென்காசி மாவட்டக் கலந்துரையாடலில் தீர்மானம்!

1 Min Read
- Advertisement -

கீழ்ப்பாவூர், நவ. 21- தென்காசி மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம் கீழப்பாவூர் பெரியார் மாளிகையில் 18.11.2026 அன்று மாலை 4 மணிக்கு தென்காசி மாவட்ட கழகத் தலைவர் வழக் குரைஞர் த.வீரன் தலைமையில் நடைபெற்றது.

மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா. குணசேகரன் கூட்டத்தின் நோக்கத்தை விளக்கியும், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 94ஆம் பிறந்த நாள் விழா, விடுதலை சந்தா திரட்டுவது குறித்தும் சிறப்புரையாற்றினார்.

மாநில பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் கே.டி.சி. குருசாமி, மாநில திராவிட மாணவர் கழக இணைச் செயலாளர் மு.இளமாறன், பொதுக் குழு உறுப்பினர் அய்.இராமசந்திரன், மாவட்ட துணைத் தலைவர் ஆலங்குளம் செந்தில் குமார், மாவட்ட துணைச் செயலாளர் அ.சவுந்தரபாண்டியன், மாவட்ட திராவிட மாணவர் கழகத் தலைவர் சு. இனியன் ஆகியோர் கருத்துரையாற்றினர்.

தீர்மானங்கள்

14.11.2026 அன்று தஞ் சையில் நடைபெற்ற தலைமைச் செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றபட்ட தீர்மானங்களை செயல் படுத்து வது என்று தீர்மானிக்கப்பட்டது.

பெரியார் உலகமயம்! உலகம் பெரியார் மயம்! என்ற பெரும்பணியை சுமந்து ஓய்வின்றி உழைத்து வரும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 94ஆம் பிறந்த நாளான டிசம்பர் 2 அன்று ஒவ்வொருவரும் 3 விடுதலை சந்தாக்கள் வழங்குவது என்றும் 94 சந்தாக்களை பிறந்த நாள் பரிசாக மாவட்டக் கழகம் சார்பில் வழங்கி மகிழ்வது என்று தீர்மானிக்கப்பட்டது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *