தேர்தல் களத்தில் தமிழர் தலைவர் தாராபுரம் சட்ட மன்ற தொகுதி இடைத் தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் சுகன்யாவை ஆதரித்து நாளை பிரச்சாரம்!

1 Min Read

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

திராவிடர் கழகம்

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் வழக்குரைஞர் S.சுகன்யாவை ஆதரித்துத் திராவிடர் கழகத்தின் சார்பில், நாளை (29.9.2026) மாலை 5 மணிக்கு வடுகப்பட்டி பிரிவு மூலனூர். இரவு 7 மணிக்குத்  தாராபுரம் அண்ணா சிலை அருகில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்  உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குச் சேகரித்து தேர்தல் பரப்புரை மேற்கொள்ளவுள்ளார்.

அதற்கான முன் ஏற்பாடுகள் குறித்து, திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, துணைப் பொதுச் செயலாளர் ஆ.இராசா, துணைப் பொதுச் செயலாளர் அய்.பெரியசாமி,
என்.கயல்விழி, திருப்பூர் திமுக கிழக்கு மாவட்டச் செயலாளர் இல.பத்மநாதன், தஞ்சை திமுக மாவட்டச் செயலாளர்
துரை.சந்திரசேகரன், மாவட்ட வழக்குரைஞரணி அமைப்பாளர் வழக்குரைஞர் செல்வராஜ், தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி, தாராபுரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பிரபாவதி பெரியசாமி ஆகியோரை திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார், மாநில வழக்குரைஞர் அணி செயலாளர் மு.சென்னியப்பன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் ஈரோடு த.சண்முகம், மாநில இளைஞரணி செயலாளர் நாத்திக.பொன்முடி, தாராபுரம் கழக மாவட்டத் தலைவர் க.கிருஷ்ணன், பொதுக் குழு உறுப்பினர் நா.சக்திவேல், திருப்பூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர்  பல்லடம் இளங்கோவன், தாராபுரம் கழக மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் பு.முருகேசு, மாவட்ட இளைஞரணி செயலாளர் கோட்டீஸ்வரன் ஆகியோர் சந்தித்து ஆசிரியர் தேர்தல் பரப்புரை குறித்து திட்டமிடப்பட்டது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *