திருவாரூர், மே 17- திருவாரூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக மதச்சார்பற்ற கூட்டணியின் சார்பில் களமிறங்கிய திமுக வேட்பாளர் பூண்டி கே.கலைவாணன் மூன்றாவது முறையாக திருவாரூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
அதனைத் தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சியினர், சமுதாய இயக்கங்கள், கூட்டணிக் கட்சிகளின் பொறுப்பாளர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வரும் நிலையில், திராவிடர் கழகம் சார்பில் திருவாரூர் மாவட்ட தலைவர் எஸ்.எஸ்.எம்.கே.அருண் காந்தி, மாநில விவசாய தொழிலாளரணி செயலாளர் வீ. மோகன், மாநில இளைஞரணி செயலாளர் நாத்திக பொன்முடி, மாவட்ட இளைஞரணி தலைவர் கோ.பிளாட்டோ உள்ளிட்டோர் நேற்று (15.5.2026) திருவாரூர் சட்ட மன்ற உறுப்பினரும், திமுக மாவட்ட செயலாளருமாகிய பூண்டி கே.கலைவாணன் அவர்களை நேரில் சந்தித்து பயனாடை அணிவித்து தங்களது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்தனர்.
தொடர்ந்து மே 16 அன்று திராவிடர் கழகம் தலைமையில் நடைபெற இருக்கும் நீட் நுழைவுத் தேர்வு எதிர்ப்பு கண்டன ஆர்ப்பாட் டத்திற்கும், மே 17 அன்று நடைபெற இருக்கும் பெரியார் பயிற்சிப் பட்டறை நிகழ்ச்சிக்கும் அழைப்பிதழ் சட்டமன்ற உறுப்பினரிடம் திருவாரூர் மாவட்ட திராவிடர் கழகத்தினரால் வழங்கப்பட்டது.
