அய்ந்து தலைமுறைக்கும் வழிகாட்டியாக இருந்தவர் தந்தை பெரியார் அவர்கள்; அவரைத் தலைவராக ஏற்றுக்கொண்டவர்தான் நூற்றாண்டு விழா நாயகர் தருமராசன்!
நல்ல குடும்பம் ஒரு பல்கலைக்கழகம்; சுயமரியாதைப் பல்கலைக்கழகம், ஓர் அறிவுப் பல்கலைக்கழகம்!
வாழ்க நூற்றாண்டு விழா நாயகர் தருமராசன் அவர்களின் புகழ்!
நல்ல குடும்பம் ஒரு பல்கலைக்கழகம்; சுயமரியாதைப் பல்கலைக்கழகம், ஓர் அறிவுப் பல்கலைக்கழகம்!
வாழ்க நூற்றாண்டு விழா நாயகர் தருமராசன் அவர்களின் புகழ்!
சாலியமங்கலம், நவ.20 அய்ந்து தலைமுறைக்கும் வழிகாட்டியாக இருந்தவர் தந்தை பெரியார் அவர்கள். அவரைத் தலைவராக ஏற்றுக்கொண்டவர்தான் நூற்றாண்டு விழா நாயகர் தருமராசன் அவர்கள். அவரது குடும்பம் ஒரு நல்ல குடும்பம் மட்டுமல்ல; ஒரு பல்கலைக்கழகம் என்று சொல்லலாம். ஒரு சுயமரியாதைப் பல்கலைக்கழகம், ஓர் அறிவுப் பல்கலைக்கழகம்! என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள்.
- அய்ந்து தலைமுறைக்கும் வழிகாட்டியாக இருந்தவர் தந்தை பெரியார் அவர்கள்; அவரைத் தலைவராக ஏற்றுக்கொண்டவர்தான் நூற்றாண்டு விழா நாயகர் தருமராசன்! நல்ல குடும்பம் ஒரு பல்கலைக்கழகம்; சுயமரியாதைப் பல்கலைக்கழகம், ஓர் அறிவுப் பல்கலைக்கழகம்! வாழ்க நூற்றாண்டு விழா நாயகர் தருமராசன் அவர்களின் புகழ்!
- சுயமரியாதைச் சுடரொளி தருமராசன் அவர்களின் நூற்றாண்டு விழா – கழகத் தலைவர் தலைமையுரை
- ‘‘நீங்கள் பெரியாருக்குச் சொந்தமா?’’
- நான் பெரியாருடைய கொள்கையாளன்!
- ஓர் உறுதியான கொள்கைப் பற்று!
- அய்யா தருமராசன் குடும்பத்தின் வளர்ச்சியே ஒரு சிறந்த பதில்!
- மறைந்தும் மறையாமல் நம் நினைவில் வாழக்கூடிய ராஜேந்திரன்!
- இந்தக் குடும்பத்தின் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் நான் பங்கேற்றிருக்கிறேன்!
- எங்களுக்கு ஆலோசனை வழங்கக்கூடியவராக உயர்ந்திருக்கிறார் வீரசேகரன்!
- 11 பேர் டாக்டர்கள் இந்தக் குடும்பத்தில்!
- அய்ந்தாவது தலைமுறையினரோடு நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுகிறோம்!
- குழந்தைகளின் சிந்தனைகளுக்கு மதிப்பளியுங்கள்!
- அய்ந்து தலைமுறைக்கும் வழிகாட்டியாக இருந்தவர் தந்தை பெரியார் அவர்கள்!
- கொள்கைப் பணியை அன்றும், இன்றும், என்றும் தொடர்ந்து செய்து வருபவர்கள்!
- சுயமரியாதைப் பல்கலைக்கழகம்!
- விழுதுகள் வலிமையாகவும், உறுதியாகவும் இருக்கவேண்டும்!
சுயமரியாதைச் சுடரொளி தருமராசன் அவர்களின் நூற்றாண்டு விழா –
கழகத் தலைவர் தலைமையுரை
கழகத் தலைவர் தலைமையுரை
கடந்த 15.11.2026 அன்று காலை 11 மணிக்கு தஞ்சை சாலியமங்கலம் ஊராட்சியில் உள்ள வி.ஆர்.மகாலில் நடைபெற்ற சுயமரியாதைச் சுடரொளி
ஆர்.தருமராசன் நூற்றாண்டு விழா திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. அவ்விழாவில் தலைமையுரையாற்றினார் கழகத் தலைவர்.
அவரது தலைமையுரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:
‘‘நீங்கள் பெரியாருக்குச் சொந்தமா?’’
அதற்கு முன்நடந்த ஒரு நிகழ்வைச் சொல்கிறேன். மருத்துவக் கல்லூரியில் சேருவதற்காக தமிழ்மணி அவர்களிடம் நேர்காணல் நடந்தது. அப்போது இவரிடம், ‘‘நீங்கள் பெரியாருக்குச் சொந்தமா?’’ என்று கேட்டிருக்கிறார்கள்.
அதேபோன்று, இன்னொரு மாணவரிடம் நேர்காண லின்போது, சில கேள்விகள் கேட்கப்பட்டன. அந்த மாணவருடைய தந்தையார் இயக்கத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். அரசியலமைப்புச் சட்ட நகலை எரித்த நேரத்தில் பிறந்தவர் என்பதால், தன் மகனுக்கு ‘‘ஜாதி ஒழிப்பு’’ என்று பெயர் வைத்தார்.
நேர்காணல் நடத்தியவர் இவரிடம், ‘‘ஏம்பா, உன் பெயர் என்ன?’’ என்று கேட்டிருக்கிறார்.
இவரும், ‘‘ஜாதி ஒழிப்பு’’ என்று பதில் கூறினார்.
இப்பொழுது திராவிடர் கழகத்திற்கு யார் தலைவர்? என்று கேள்வி கேட்டிருக்கிறார்.
இவர் பளிச்சென்று பதிலைச் சொல்லியிருக்கிறார்.
இன்னொரு கேள்வியை, பாடம் சம்பந்தமாகக் கேட்டிருக்கிறார்.
அதற்குரிய பதிலையும் இவர் சொன்னவுடன், ‘‘நீங்கள் போகலாம்’’ என்று சொல்லி அனுப்பிவிட்டார்.
இன்னொரு நிகழ்வைச் சொல்கிறேன், என்னுடைய பார்ப்பனப் பேராசிரியர், அவர் பாகிஸ்தானிலிருந்து வந்தவர். சர்.சி.பி.ராமசாமி அய்யருடைய சொந்தக்காரர்.
பெரியாரை அழைத்து நடத்திய கூட்டத்திற்கு நான் தலைமை தாங்கினேன். இறுதி ஆண்டு படித்துக் கொண்டிருந்த மாணவன் நான். மறுநாள், பேராசிரியர் உங்களை அழைக்கிறார் என்று அட்டெண்டர் சொன்னார்.
நம்மைக் கண்டிக்கத்தான் அழைக்கிறார் என்று நினைத்துக் கொண்டு நான் சென்றேன்.
நான் பெரியாருடைய கொள்கையாளன்!
அப்போது அந்தப் பேராசிரியர், ‘‘Mr.Veeramani, are you adopted son of Periyar?’’ (திரு.வீரமணி, நீங்கள் பெரியாரின் வளர்ப்பு மகனா?) என்று கேட்டார்.
‘‘இல்லை, நான் பெரியாருடைய கொள்கையாளன்’’ என்று வெளிப்படையாகச் சொன்னேன்.
‘‘Oh, he is a great leader! I want to know him’’ என்று சொல்லி, ‘‘நீங்கள் போகலாம்’’ என்றார்.
தமிழ்மணி அவர்கள் முதல் மாத ஊதியத்தைக் கொண்டு வந்து பெரியாரிடம் வழங்கிய அந்தச் செயல், இன்றுவரை தொடரும் நன்றியுணர்ச்சியின் அடை யாளமாக இருக்கிறது.
ஓர் உறுதியான கொள்கைப் பற்று!
இந்தக் குடும்பத்தைப் பொறுத்தவரையில், இக் குடும்பத்தினரிடம் இயக்கத்தையும், பெரியார் கொள்கைகளையும் தவிர வேறு எதையும் நாடிச் செல்லாத ஓர் உறுதியான கொள்கைப் பற்று இருந்தி ருக்கிறது, இருந்து வருகிறது.
அந்தக் கொள்கைப் பற்றுக்கு மிகுந்த துணையாக இருந்தவர்தான் ஆர்.தருமராசன் அவர்களுடைய வாழ்விணையர் மணியம்மாள் அவர்கள்.
இந்தப் பகுதியில் பிரபலமான குடும்பமாக விளங்கும் அய்யா வெங்கடாசலனார் குடும்பம் ஒரு பெரிய ஆலமரம் போன்றது. அந்த ஆலமரத்தின் விழுதுகள்தான் இன்று இந்தக் குடும்பத்தில் உள்ளவர்கள். அவர்கள் அனைவரும் நன்றி உணர்ச்சியோடும், கொள்கைப் பற்றோடும் இந்த நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
அய்யா தருமராசன் குடும்பத்தின் வளர்ச்சியே ஒரு சிறந்த பதில்!
‘பெரியார் என்ன செய்தார்’ என்று கேட்பவர்களுக்கு இந்தக் குடும்பத்தின் வளர்ச்சியே ஒரு சிறந்த பதில்.
ஒரு காலத்தில் படிக்கக்கூடாது என்று தடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள், இன்று எத்தனை பேர் மருத்துவர்களாக உயர்ந்திருக்கிறார்கள் என்பதைப் பாருங்கள்.
இந்த அழைப்பிதழில் உள்ள பெயர்களைப் பார்த்தாலே தெரியும். எத்தனை மருத்துவர்கள்! சாதாரண மருத்துவர்கள் அல்ல; பல்வேறு சிறப்புத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற மருத்துவர்கள்.
எம்.டி., மகப்பேறு மருத்துவம், எம்.எஸ். எனப் பல்வேறு துறைகளில் உயர்ந்திருக்கிறார்கள். வெளிநாடுகளிலும் பணியாற்றுகிறார்கள்.
மறைந்தும் மறையாமல் நம் நினைவில் வாழக்கூடிய ராஜேந்திரன்!
அதேபோல, மறைந்தும் மறையாமல் நம் நினைவில் வாழக்கூடிய ராஜேந்திரன் அவர்களும் இந்தக் குடும்பத்தின் சிறப்பான உறுப்பினர். அவர் விவசாயக் கல்வி பயின்று, விஜயவாடாவில் அதிகாரியாகப் பணியாற்றியவர். நாங்கள் பகுத்தறிவாளர் கழகத்தின் நாத்திகர் மாநாட்டிற்காக அங்கே சென்றிருந்தபோது, அவர் காட்டிய அக்கறையை என்னால் மறக்க முடியாது.
அந்த நேரத்தில் எனக்கு இதய அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டிருந்தது. மாநாட்டுக்காக சென்றிருந்த எனக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தங்குமிடத்தைப் பார்த்து, ‘அய்யா, அந்த இடம் உங்களுக்குப் போதுமான வசதியாக இருக்காது. உங்களுடைய அனுமதி இல்லாமலேயே ஒரு நல்ல விடுதியில் அறை ஏற்பாடு செய்துவிட்டேன். அங்கேதான் நீங்கள் தங்க வேண்டும்’ என்று அக்கறையோடு கூறினார்.
அந்த அளவுக்கு எங்கள்மீது இந்தக் குடும்பத்தினர் கொண்டிருக்கும் அன்பும், அக்கறையும் அளப்பரியது. அந்த அன்பும், அக்கறையும் தந்தையோடு போய்விட வில்லை. அவருடைய பிள்ளைகளிடமும் தொடர்ந்து இருக்கிறது.
என்னுடைய வாழ்விணையராக இருந்தாலும், பிள்ளைகளாக இருந்தாலும், இந்தக் குடும்பத்தோடு எங்களுக்கு இருந்த நெருக்கம் தனித்துவமானது.
இந்தக் குடும்பத்தின் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் நான் பங்கேற்றிருக்கிறேன்!
இந்தக் குடும்பத்தில் பல திருமணங்கள் நடை பெற்றிருக்கின்றன. பத்து, பதினொரு திருமணங்கள் நடைபெற்றுள்ளன. அவற்றில் நான்கு திருமணங்களைத் தந்தை பெரியார் தலைமையிலும், மூன்று திருமணங்களை அன்னை மணியம்மையார் தலைமையிலும் நடத்தியுள்ளார்கள். மீதமுள்ள அத்துணை திருமணங்களையும் நான்தான் நடத்தி வைத்திருக்கிறேன். அந்த அளவுக்கு இந்தக் குடும்பத்தின் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் நான் பங்கேற்றிருக்கி
றேன்.
இந்தக் குடும்பத்தில் ஒருவராகவே நான் இருந்து வந்திருக்கிறேன். அவர்களோடு எங்களுக்கிருந்த நெருக்கம் அப்படிப்பட்டது. இந்தக் குடும்பத்தில் உள்ள பிள்ளைகள் அனைவரையும் நாங்கள் சிறு வயதிலிருந்தே பார்த்து வருகிறோம். அவர்களுடைய வளர்ச்சியில் எங்களுக்கும் ஒரு பங்கு இருக்கிறது. .
எங்களுக்கு ஆலோசனை வழங்கக்கூடியவராக உயர்ந்திருக்கிறார் வீரசேகரன்!
வீரசேகரன் ஒரு கடிதத்தைக் காட்டினார். சி.ஆள வந்தார் எழுதிய கடிதம் அது.
வீரசேகரன் சட்டக் கல்லூரியில் படித்து முடித்த பிறகு, அவருடைய எதிர்காலம் குறித்து நூற்றாண்டு விழா நாயகரான தருமராசன் அவர்களுக்கு மிகக் கவலையாக இருந்தது. அவர், ஆளவந்தாரிடம் தன்னுடைய கவலையைத் தெரிவித்தவுடன், அவர், ‘‘ஆசிரியரிடம் நான் சொல்லியிருக்கிறேன். ஆசிரியர், அவரைப் பார்த்துக் கொள்வார் சென்னையில்’’ என்று சொல்லியிருக்கிறார்.
வீரசேகரனுக்கு நாங்கள்தான் கார்டியன். அவர் எந்த அலுவலகத்தில் சேர வேண்டும் என்று முடிவெடுத்து, ஒரு முக்கியமான அலுவலகத்தில், கண்ணியமானவர், பெருந்தன்மையானவர், எல்லோராலும் மதிக்கப்படக் கூடியவர், நம்முடைய ராஜமாணிக்கம் அவர்கள். அவரிடம் அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தி வைத்தோம்.
அன்று நாங்கள் வழிகாட்டிய அந்த இளைஞர், இன்று பல விஷயங்களில் எங்களுக்கு ஆலோசனை வழங்கக்கூடியவராக உயர்ந்திருக்கிறார்.
நம்முடைய பிள்ளைகளை நாம் வழிநடத்தினோம். ஆனால், இன்று அந்தப் பிள்ளைகளே நம்மை வழிநடத்து கிறார்கள். இதுதான் தலைமுறை வளர்ச்சியின் சிறப்பு.
அதிலும் வீரசேகரனுடைய அணுகுமுறை மிக வித்தியாசமாக இருக்கும். ஊரே ஓடினாலும்கூட, அவர் நிதானமாகத்தான் வருவார். ரயிலுக்குச் செல்ல வேண்டுமா? நிதானமாகத்தான் வருவார். நீதிபதியைச் சந்தித்துப் பேசவேண்டுமா? நிதானமாகத்தான் வருவார்.
அவருக்கென்று ஒரு ‘டெக்னிக்’ இருக்கிறது. அந்த ‘டெக்னிக்’ அவருடைய தனித்தன்மையாகும்.
ஆகவே, இப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பெருமை உண்டு. இந்தக் குடும்பம், பாரம்பரியான ஒரு நல்ல குடும்பமாகும்.
11 பேர் டாக்டர்கள் இந்தக் குடும்பத்தில்!
இந்த நூற்றாண்டு விழா அழைப்பிதழைப் பார்த்தீர்க ளேயானால், 11 டாக்டர்கள் பெயர் இருக்கிறது. எப்படி வந்தார்கள்? ஒரு காலத்தில் நமக்கெல்லாம் படிப்பு வராது என்றார்கள். சமஸ்கிருதம் தெரிந்திருந்தால்தான், மருத்துவக் கல்லூரியில் சேர முடியும். அந்தத் தடை களை எல்லாம் உடைத்தெறிந்தது பெரியார் இயக்கம்.
இன்றைக்கு அதை் தலைகீழாக மாற்றவேண்டும் என்பதற்காகத்தான் நீட் தேர்வைக் கொண்டு வந்திருக்கிறார்கள். அதனால்தான் இன்றும் கல்வி உரிமைக்காகவும், சமூகநீதிக்காகவும் நாம் போராடிக் கொண்டிருக்கிறோம். நீட் தேர்வுக்கு எதிராகவும் போராடி வருகிறோம்.
இன்றைய இளைய தலைமுறையினர் இதை யெல்லாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
அய்ந்தாவது தலைமுறையினரோடு நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுகிறோம்!
இன்று நாம் இந்தக் குடும்பத்தின் அய்ந்தாவது தலைமுறையோடு நூற்றாண்டு விழாவைக் கொண்டா டுகிறோம். இதுதான் மிக முக்கியமானது. அந்தக் குழந்தைகள் அனைவரும் பெரியார் பிஞ்சுகள்! சிறு குழந்தைகளைப் பார்த்தாலே எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். அவர்களிடம் பேசுவதும், அவர்களைப் பாராட்டுவதும் எனக்குப் பிடிக்கும். இங்கே யும் சில குழந்தைகள் என்னுடன் அமர்ந்து பேசினார்கள்.
அவர்களிடம், ‘உன் பெயர் என்ன? என்ன படிக்கிறாய்?’ என்று கேட்டேன்.
‘மூன்றாம் வகுப்பு படிக்கிறேன்’ என்றார்கள்.
‘எதிர்காலத்தில் என்னவாகப் போகிறீர்கள்?’ என்று கேட்டேன்.
அவர்கள் உடனே, ‘டாக்டராக வேண்டும்’ என்று சொன்னார்கள்.
மூன்றாம் வகுப்புப் படிக்கும் குழந்தைகள் இவ்வளவு தெளிவாகத் தங்களுடைய எதிர்கால இலட்சியத்தைச் சொல்வதைப் பார்த்து மகிழ்ச்சியாக இருந்தது.
அடுத்ததாக, ‘ஏன் டாக்டராக வேண்டும்? வேறு படிப்பைப் படிக்கலாமே? நிறையப் பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காகவா?’ என்று கேட்டேன்.
அதற்கு அவர்கள், ‘இல்லை, இல்லை; எல்லோரையும் காப்பாற்ற வேண்டும்’ என்ற பொருளில் பதில் சொன்னார்கள்.
அந்தக் குழந்தைகளுக்கு எவ்வளவு அறிவும், ஆற்றலும் இருக்கிறது என்பதைப் பாருங்கள்!
குழந்தைகளின் சிந்தனைகளுக்கு
மதிப்பளியுங்கள்!
மதிப்பளியுங்கள்!
எனவே, இந்தக் குடும்பத்தின் தாய்மார்களுக்கும், சகோதரர்களுக்கும் நான் சொல்லிக்கொள்வது என்ன வென்றால், குழந்தைகளை ஊக்கப்படுத்துங்கள். அவர்களிடம் ஏராளமான அறிவும், ஆற்றலும் இருக்கிறது. அவர்களுடைய சிந்தனைகளுக்கு மதிப்பளியுங்கள்.
இந்தக் குடும்பத்தின் அய்ந்தாவது தலைமுறையிலும் பெரியார் கொள்கை தொடர்கிறது என்பதுதான் இந்த நூற்றாண்டு விழாவின் மிகப்பெரிய சிறப்பு.
அய்ந்து தலைமுறைக்கும் வழிகாட்டியாக இருந்தவர் தந்தை பெரியார் அவர்கள்!
இந்த அய்ந்து தலைமுறைக்கும் வழிகாட்டியாக இருந்தவர் தந்தை பெரியார் அவர்கள். அவரைத் தலைவராக ஏற்றுக்கொண்டவர்தான் இந்த நூற்றாண்டு விழா நாயகர் தருமராசன் அவர்கள்.
இந்த விழாவோடு புதுமனைப் புகுவிழாவையும் இணைத்து மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.
இந்தக் குடும்பத்தைப் பற்றிய நிகழ்ச்சி எதுவாக இருந்தாலும் தவறாமல் பங்கேற்பவர் ஒருவர் உண்டு. அவர்தான் நம்முடைய அறக்கட்டளையின் துணைத் தலைவராக இருந்த ராசகிரி தங்கராசு அவர்கள்.
இந்தக் குடும்பத்தின் பூர்வீக வரலாற்றை நன்கு அறிந்தவர். அந்த வரலாற்றை எப்போதும் எடுத்துச் சொல்லக்கூடியவர். அப்படிப்பட்ட சிறப்புமிக்க குடும்பமாக இந்தக் குடும்பம் விளங்குகிறது.
கொள்கைப் பணியை அன்றும், இன்றும், என்றும் தொடர்ந்து செய்து வருபவர்கள்!
இங்கே வந்திருக்கும் அய்யா ரங்கசாமி போன்ற வர்கள், எந்த இயக்கத்தில் இருந்தாலும், எந்த அரசியல் கட்சியில் இருந்தாலும், எப்போதும் பெரியாரியக் கொள்கையாளர்களாகவே இருப்பவர்கள். கட்சி வேறுபாடுகளைக் கடந்து, தங்களுடைய கொள்கைப் பணியை அன்றும், இன்றும், என்றும் தொடர்ந்து செய்து வருபவர்கள்.
அவர்களைப் போன்ற பெருமக்களையும், உங்கள் அனைவரையும் வரவேற்று – இந்த நிகழ்ச்சியை மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.
இந்த மலரில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் அனைத்தும் சிறப்பானவை. ஒரு சிறிய தொகுப்புக்குள் ஏராளமான செய்திகளை அடக்கியிருப்பது பாராட்டத்தக்கது.
எனவே, இந்த நிகழ்ச்சியைச் சிறப்பாக ஏற்பாடு செய்த குடும்பத்தினர் அனைவருக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சுயமரியாதைப் பல்கலைக்கழகம்!
இந்தக் குடும்பம் ஒரு நல்ல குடும்பம் மட்டுமல்ல; ஒரு பல்கலைக்கழகம் என்று சொல்லலாம். இது ஒரு சுயமரியாதைப் பல்கலைக்கழகம்! ஓர் அறிவுப் பல்கலைக்கழகம்!
தருமராசன் அவர்களின் நினைவைப் போற்றி, அவருடைய கொள்கை உணர்வுகளை அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் எடுத்துச் செல்ல வேண்டும்.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்த பல்லாயிரக்கணக்கான தோழர்கள், வழக்குரைஞர்கள், மருத்துவர்கள், பெருமக்கள், டாக்டர் செல்வராஜ் போன்றவர்கள் என அனைவருக்கும் தனித்தனியாகப் பெயர் சொல்லி நன்றி தெரிவிக்க இயலாத நிலையில், அவர்கள் அனைவருக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தக் குடும்பத்திற்கு உரியவன் என்ற முறையில், வரவேற்பு தெரிவித்ததைப் போலவே, நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தொடர்ந்து இந்தக் குடும்பம் மேலும் மேலும் வளர்ச்சி யடைந்து, பல தலைமுறைகளாகத் தலைநிமிர்ந்து வாழ வேண்டும்.
விழுதுகள் வலிமையாகவும்,
உறுதியாகவும் இருக்கவேண்டும்!
உறுதியாகவும் இருக்கவேண்டும்!
தருமராசன் அவர்கள் விதைத்த விதை, இன்று மிகப்பெரிய ஆலமரமாக வளர்ந்திருக்கிறது. அந்த ஆலமரத்திற்கு எந்தப் பழுதும் ஏற்படாமல், அதன் விழுதுகள் வலிமையாகவும், உறுதியாகவும் இருக்க வேண்டும்.
அந்த விழுதுகள் அனைத்தும் பெரியார் கொள்கை யைத் தாங்கி நிற்கும் விழுதுகளாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டு, என்னுடைய உரையை நிறைவு செய்கிறேன்.
வாழ்க பெரியார்!
வளர்க சுயமரியாதை!
வாழ்க நூற்றாண்டு விழா நாயகர் தருமராசன் அவர்களின் புகழ்!
– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமை
யுரையாற்றினார்.
