பிஏடிசிஏ அமைப்பின் வரலாற்று முக்கியத்துவம் பெறும் மாபெரும் சாதனை. “பெரியார் உலக மயம் உலகம் பெரியார் மயம்” எனும் உலகமயமாகி வரும் தந்தை பெரியார் அவர்களின் உயரியக் கொள்கைகள் வியப்பிற்குரியதாகியுள்ளது. பிறவி நாத்திகராகவும், உயரிய பகுத்தறிவு மேதையாகப் போற்றப்படும் பெரியார் அவர்களின் உன்னதக் கொள்கை உலகமயமாகி வருகிறது. பெரியார் அவர்களை நேரில் பார்த்து, அவரது எழுச்சி மிகுந்த உரையைக் கேட்ட என் போன்றோர்கள், அய்யாவின் மறைவிற்குப் பிறகு பார் போற்றும் பெரும் அறிவுலக மேதையாகப் போற்றுப்படுவது பெருமையிலும் பெருமையாக இருக்கிறது.
2026ஆம் ஆண்டு அக்டோபர் 13ஆம் நாள் ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் (NSW) மாநில நாடாளுமன்ற மேலவையில் அறிவுலக மேதை தந்தை பெரியார் அவர்களை பிஏடிசிஏ அமைப்பையும் அங்கீகரிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்தியாவிற்கு வெளியே ஒரு நாடாளுமன்றத்தில் தந்தை பெரியாருக்கு அங்கீகாரம் வழங்கப்படுவது இதுவே முதல் முறை என்பது வரலாற்றுச் சிறப்புமிக்க அரிய பெரும் நிகழ்வாகும்.
என்எஸ் (NS) பசுமைக் கட்சியின் மேலவை உறுப்பினர் கேட் ஃபேக்ட்மன் (Cate Factman) அவர்களை, செப்டம்பர் 24ஆம் நாள் இந்தத் தீர்மானத்திற்கான அறிவிப்பை முன் வைத்தார். அதைத் தொடர்ந்து அக்டோபர் 13ஆம் நாள் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அறிவுலக மாமேதை தந்தை பெரியார் அவர்களின் சமூகநீதி, சுயமரியாதைத் சமத்துவம், சகோதரத்துவம் மற்றும் மானுட உயர்விற்கான பகுத்தறிவுச் சிந்தனைகள் பரந்துபட்ட உலகளவில் அங்கீகாரம் பெறும் பெருமைக்குரிய நிகழ்வாகும்.
புகழ்பெற்று போற்றப்படும் தந்தை பெரியார் அவர்களின் உயரிய உயர் எண்ணங்கள் ஆஸ்திரேலிய நாட்டின் மேலவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட அக்டோபர் திங்களில்தான் அறிவுலகம் போற்றும் ஜப்பான் நாட்டில் அய்ந்தாவது பெரியார் பன்னாட்டு மனிதநேய மாநாடு நடைபெற்று வரலாற்று புகழ் பரப்புள்ளது. மேலும் தளபதி மு.க.ஸ்டாலின், முதலமைச்சராக இருந்தபோது கோவை மாநகரில் 300 கோடி அளவில் இந்திய தீபகற்பமே வியக்கும் அளவில் “பெரியார் அறிவுலகம்” என்ற பேரமைப்பினை உருவாக்கி திறக்கப்பட்டுள்ளது என்பது மகிழ்வான பதிவாகும். பெரியார் வான் பரப்பையும் விரைவில் அறிஞர்களின் ஆய்வில் எட்டுவார்.
