லால்குடி கழக மாவட்டம், கீழவாளாடி கிராமம், ஜாதி ஒழிப்புச் சட்ட எரிப்பு போராட்ட வீரர் பெ.அங்கமுத்து இன்று (20.11.2026) மறைவுற்றார். அவருக்கு செல்வி, மாலதி என்ற மகள்களும், ரமேஷ் குமார், சுரேஷ்குமார், சதீஷ்குமார் ஆகிய மகன்களும் உள்ளனர்.
அவரது இறுதி ஊர்வலம் கீழவாளாடி கிராமம், இல்லத்தில் இருந்து இன்று மாலை 4 மணி அளவில் புறப்பட்டு இறுதி நிகழ்வுகள் நடைபெற்றது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்குக் கழகத் தோழர்கள் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்து இரங்கல் கூட்டத்தில் கலந்து கொண்டு வீரவணக்கம் செலுத்தினர்.
